

தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் ரூ.1,500 கோடி மதிப்பில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள போடி மலைகளில் சுமார் ரூ.1500 கோடி செலவில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கத் திட்டமிடப்பட்டது.
அணுவைவிட மிகச் சிறிய, கண்ணுக்குப் புலப்படாத நியூட்ரினோ துகளை ஆராய்வதற்கான இந்த மையம் மூலம், பிரபஞ்சம் உருவான ரகசியத்தை அறிய முடியும் என்று கூறப்படுகிறது.
நியூட்ரினோ என்பது பிரபஞ்சத்தின் அடிப்படைத் துகள்களில் ஒன்று. அது பூமிக்கு அடியிலும், சூரியனுக்கு உள்ளேயும் தடையின்றி பாயக்கூடியது. இதனால், பூமிக்கு அடியில் உள்ள வளங்கள் மற்றும் சூரியனின் மையப் பகுதி பற்றி தெரிந்துகொள்ள முடியும்.
தற்போது அமைக்கப்படும் ஆய்வகத்தில் பிற பொருட்களில் இருந்து நியூட்ரினோக்கள் பிரித்து எடுத்து சேகரிக்கப்படும். இதன்மூலம் நியூட்ரினோக்களின் தன்மை பற்றி மேலும் விரிவாக படிக்க முடியும். இதனால், நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதலை எதிர்நோக்கி இருக்கும் சூழல் ஏற்பட்டது.
தற்போது நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
தொடர்புடைய இணைப்பு:>நியூட்ரினோ ஆய்வகம் அணுக்கழிவு மையமா?