Published : 10 Apr 2014 10:42 AM
Last Updated : 10 Apr 2014 10:42 AM

தேர்தல் விதிமுறைகளை காரணம் காட்டி துணைவேந்தர் நியமனங்களை நிறுத்தக் கூடாது: அரசுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் கல்வியாளர்கள் கோரிக்கை

தேர்தல் விதிமுறைகளைக் காரணம் காட்டி பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்களை நிறுத்திவைக்கக் கூடாது என அரசுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் கல்வியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருச்சி பாரதிதாசன், சேலம் பெரியார், காரைக்குடி அழகப்பா மற்றும் சென்னை தமிழ்நாடு கால்நடை அறிவியல் மருத்துவம் ஆகிய பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவி பல மாதங்களாக காலியாக உள்ளன. தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்கல்வி பல்கலைக்கழகத்தில் 2 ஆண்டுகளாக துணைவேந்தர் பணியிடம் காலியாக உள்ளது.

பல்கலைக்கழகங்களில் விதிகளை மீறி துணை வேந்தர் நியமனங்கள் நடப்ப தாகவும் மேற்கண்ட பல்கலைக் கழகங்களில் யுஜிசி விதிகளுக்கு உட்பட்டு துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும் எனவும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் கிருஷ்ணசாமி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

யுஜிசி விதிகளின்படி துணை வேந்தர் தேர்வுக்குழு அமைக் கப்பட்டுள்ளதாகவும் அக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் துணைவேந்தர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் அரசு பதில் மனு தாக்கல் செய்தது.

இதை ஏற்ற நீதிமன்றம், துணைவேந்தர் நியமனத்துக்குப் பிறகு, யுஜிசி வழிகாட்டல் விதிகள் ஏதேனும் மீறப்பட்டிருந்தால் அதுகுறித்து மனு செய்து நியாயம் கோரலாம் என கிருஷ்ண சாமியின் மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர் நியமனங்களுக்கு இருந்த தடை நீங்கியது. ஆனாலும், தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி, துணைவேந்தர் நியமனங்கள் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக கல்வியாளர்கள் தரப்பில் கவலை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய அவர்கள், ‘‘உயர்நீதி மன்ற வழிகாட்டுதல்களின்படி, காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஆனால், தேர்தல் நடத்தை விதிகளைக் காரணம் காட்டி அரசு தாமதம் செய்வதாகத் தெரிகிறது. புதிய தலைமைச் செயலாளர் நியமனம், ஷீலா பாலகிருஷ்ணனுக்கு ஆலோசகர் பதவி வழங்கியது உள்ளிட்ட வைகளில் பின்பற்றப்பட்ட நடைமுறைகளின்படி தேர்தல் ஆணையத்தின் முறையான அனுமதி பெற்று, உடனடியாக துணைவேந்தர் நியமனங்கள் செய்ய வேண்டும். துணைவேந் தர்கள் இல்லாத பல்கலைக்கழகங் களில் முக்கிய முடிவுகள் எடுக்க முடியாமல் உள்ளது.

துணைவேந்தர் பொறுப் புக்குழுவில் நிலவும் ஈகோ பிரச்சினைகளாலும் பல்கலைக் கழகங்கள் தத்தளித்து வரு கின்றன. எனவே, துணை வேந்தர் நியமனத்தில் அரசும் பல்கலைக்கழக வேந்தரான கவர்னரும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x