மாணவர்களுக்கு சைக்கிள் வழங்க ரூ.277 கோடி: பேரவையில் அமைச்சர் சம்பத்குமார் தகவல்

சம்பத்குமார்

சம்பத்குமார்

Updated on
1 min read

சென்னை: சட்​டப்​பேர​வை​யில் பிற்​படுத்​தப்​பட்​டோர், மிக​வும் பிற்​படுத்​தப்​பட்​டோர் நலத் துறை மானியக் கோரிக்​கை​கள் மீதான விவாதம் நேற்று நடை​பெற்​றது. அதற்கு அமைச்​சர் சம்​பத்​கு​மார் பதில் அளித்​தார். அதன் விவரம்:

அமைச்​சர் சம்​பத்​கு​மார்: பிளஸ் 1 பயிலும் 5.32 லட்​சம் மாண​வர்​களுக்கு நவீன சைக்​கிள் வழங்க ரூ.277 கோடி நிதி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. இத்​திட்​டத்தை விரை​வாக செயல்​படுத்​தும் வகை​யில் 11 உறுப்​பினர்​கள் கொண்ட கொள்​முதல் குழு அமைக்​கப்​பட்​டு, அதன் முதல் கூட்​டம் கடந்த 24-ம் தேதி நடத்​தப்​பட்​டது. விரை​வில் ஒப்​பந்​தப்​புள்ளி அறி​விப்பு வெளி​யிடப்படும். சமூகநீதி விடு​தி​களில் சுகா​தா​ரம், பாது​காப்பு உறுதி செய்​யப்​படு​வதுடன், விடு​திக் காப்​பாளர்​கள் பணி​யிடங்​களை நிரப்​ப​வும் நடவடிக்கை எடுக்​கப்​படும்.

கிளை​மாக்ஸை முன்பே சொல்​லி​விட்​டால், படம் எப்​படி ஓடும் என்று கேட்​டார்​கள். இந்த படத்​தின் ஹீரோ யார் என்று எல்​லோருக்​கும் தெரி​யும். எங்​கள் படம் எப்​படி ஓடும் என்று உலகத்​துக்கே தெரி​யும்.

பாட்டு பாடிய அமைச்சர்: ஒரு பாடல் மட்​டும் பாடிக் கொள்கிறேன். இது எதிர்க்​கட்​சித் தலை​வ​ருக்கு பிடிக்​கும் என்று தெரி​யும். ‘‘தம்பி நான் படித்​தேன் காஞ்​சி​யிலே நேற்​று. அதை நான் உனக்கு சொல்​லட்​டுமா இன்​று. தெருத் தெரு​வாய் கூட்​டு​வது பொதுநலத் தொண்​டு. ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்​தால் சுயநல​முண்​டு.’’ சிலர் ரீல்ஸ் பரப்​பு​கின்​ற​னர் என்று அப்​போதே எம்​ஜிஆர் பாடி​யுள்​ளார். (தி​முக​வினர் எழுந்து அமளி.)

அமைச்​சர் செங்​கோட்​டையன்: எம்​ஜிஆர் பாடலைத்​தான் அமைச்​சர் பாடி​னார். அதில் உள் அர்த்​தம் எது​வும் இல்​லை.

எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின்: அமைச்​சர் பதில் உரையை ஒரு நாள் தாமத​மாக தற்​போது​தான் ஆரம்​பித்​துள்​ளார். இதில் பாட்டு வேறு பாடு​கி​றார். சாட்​சிக்கு என்​னை​யும் அழைக்​கி​றார். நாங்​கள் இதற்கு பதில் சொல்ல அனு​ம​திக்க வேண்​டும். இவ்​வாறு விவாதம் நடை​பெற்​றது.

<div class="paragraphs"><p>சம்பத்குமார் </p></div>
ஆதவ் அர்ஜுனாவின் தவறான பேச்சுகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்குக: தமிழக பாஜக

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in