Published : 13 Apr 2014 01:40 PM
Last Updated : 13 Apr 2014 01:40 PM

பழவேற்காட்டில் ஆந்திர மீனவர்கள் திடீர் தாக்குதல்: 50 வீடுகள், 100 படகுகள் எரிந்து சாம்பல்; ஏடிஎஸ்பி உள்பட 7 போலீஸார் காயம்

பழவேற்காட்டில் தமிழக மீனவர் களின் மீதும் அவர்களின் வீடு களின் மீதும் ஆந்திர மீனவர்கள் சனிக்கிழமையன்று பெட்ரோல் குண்டுவீசி, பயங்கர ஆயுதங்களால் தாக்கினர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பழவேற்காட் டில், 15 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் புலிகாட் ஏரி உள்ளது. இந்த ஏரியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பாட்டைக்குப்பம், ஆரம் பாக்கம், புதுக்குட்டி உள்பட 24 மீனவ கிராமங்களைச் சேர்ந் தவர்களும், தமிழக பகுதியில் உள்ள சின்னமாங்கோடு, பெரிய மாங்கோடு, புதுக்குப்பம் உள்பட 12 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களும் மீன்பிடித்து வருகின் றனர். சமீபத்தில் இரு மாநில மீனவர் களுக்கும் இடையே எல்லை தாண்டி மீன்பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் சமாதானம் ஏற்பட்டது.

இந்நிலையில், இரு தினங்க ளுக்கு முன்பு நொச்சிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஆந்திர மீனவர்கள் சின்னமாங்கோடு பகுதி யில் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்தனர். இதற்கு, சின்னமாங் கோடு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், ஆந்திர மீனவர்கள் மூன்று பேர் காயம் அடைந்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஆந்திர மீனவர்கள் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டனர். இதற்காக, சண்டைக்கு அழைக்கும் விதமாக சனிக்கிழமை அதிகாலையில் ஆந்திர மீனவர்கள் தங்கள் எல்லைப் பகுதியில் கொடி ஏற்றினர். தங்கள் மீது தாக்குதல் நடத்தப் போவதை அறிந்த சின்ன மாங்கோடு, பெரியமாங் கோடு கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் அஞ்சி வெள்ளிக்கிழமை இரவே தங்கள் வீடுகளை விட்டு வெளியறத் தொடங்கினர்.

சனிக்கிழமையன்று சின்னமாங் கோடு, பெரியமாங் கோடு கிராமங் களில் புகுந்த ஆந்திர மீனவர்கள் அங்கிருந்த வீடுகளையும் படகு களையும் தீ வைத்துக் கொளுத் தினர்.

இதில், 50 வீடுகள் மற்றும் 100 படகுகள் எரிந்து சாம்பலாயின. அவர்களைத் தடுக்க முயன்ற போலீஸார் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியதில், ஒரு போலீஸ் ஜீப் எரிந்தது. இரண்டு போலீஸ் வாகனங்கள், பைக்குகள் மற்றும் பத்திரிகையாளர்களின் வாகனங்கள் ஆகியவை அடித்து நொறுக்கப்பட்டன. அவர்களைச் சமாளிக்க முடியாமல் திணறிய போலீஸார் வானத்தை நோக்கிச் சுட்டனர்.

இந்தக் கலவரத்தில், ஆந்திர மீனவர்கள் ஈட்டியால் குத்தியதில் ஏடிஎஸ்பி ஸ்டாலின், ஆரம்பாக்கம் இன்ஸ்பெக்டர் ராஜா ராபர்ட் உள்பட ஏழு காவலர்கள் காயம் அடைந்தனர்.

மாவட்ட எஸ்.பி. சரவணன் உத்தரவின் பேரில், 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கலவரத்தைத் தடுக்க சிறப்பு அதிரடி போலீஸார் வரவழைக் கப்பட்டுள்ளனர். வஜ்ரா’ வாகனங் களும் நிறுத்தப்பட்டுள்ளன. கலவரத்தில் ஈடுபட்ட ஆந்திர மீனவர்கள் பலரை பிடித்து, போலீஸார் விசாரித்து வருகின்ற னர். இந்த கலவரத்தால் சின்ன மாங்கோடு, பெரியமாங்கோடு ஆகிய கிராமங்களில் எஞ்சியுள்ள மீனவர்கள் ஊரை காலி செய்து விட்டு பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்கின்றனர்.

ஆட்சியர் வீரராகவராவ், டிஐஜி சத்தியமூர்த்தி, எஸ்பி சரவணன், பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் மேனுவல் ராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர்.

இந்த சம்பவம் காரணமாக, பழவேற்காடு பகுதியை சுற்றியுள்ள மீனவ கிராமங்களில் பதற்றம் நிலவுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x