

இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்ச தோல்வியடைந்ததை தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வரவேற்றுள்ளன.
த.மா.கா. தலைவர் ஞானதேசிகன், கூறும்போது, தமிழர்கள் ஒன்றிணைந்து முடிவெடுத்தால் ராஜபக்ச தோல்வி அடைவது உறுதி என்பது தெரிந்ததுதான்.
தமிழர்கள் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற சிறிசேனா, தமிழர்கள் உரிமையைப் பாதுகாப்பது அவசியம், என்றார்.
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கோபண்ணா தெரிவிக்கையில், தமிழ் மக்களுக்கு அதிகாரம் அளிப்பதை புதிய அரசு முன்னெடுப்பது அவசியம் என்று கூறியுள்ளார்.