

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலுக்கு முதல் முறையாக இரண்டு போலீஸ் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீரங்கம் சட்டப் பேரவை தொகுதிக்கு பிப்ரவரி 13-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
''மேகாலயாவைச் சார்ந்த மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி வினோத்குமார் போலீஸ் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தை சார்ந்த மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி பல்கார் சிங் பொது பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்தலை முன்னிட்டு திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் அரசு நலத்திட்ட உதவி வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், டெங்கு விழிப்புணர்வு முகாம் நடத்தவும், குடியரசு தின விழாவுக்கும் தடை இல்லை.
தேர்தல் விதிமீறல்கள் குறித்து 1950 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்'' என்று சந்தீப் தெரிவித்தார்.