Published : 21 Jan 2015 09:24 AM
Last Updated : 21 Jan 2015 09:24 AM

யூரியா உரத்துக்கு விலை கட்டுப்பாடு நீக்கம்: மத்திய அரசுக்கு ராமதாஸ் கண்டனம்

யூரியா உரத்தின் மீதான விலை கட்டுப்பாட்டை நீக்கும் மத்திய அரசின் முடிவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

உரங்களைப் பயன்படுத்தா மல் லாபகரமாக விவசாயம் செய்வதற்கான மாற்று வழி களைக் கண்டுபிடிக்காமல், உரத்தின் விலையை மட்டும் உயர்த்திக் கொண்டே செல்வது சரியல்ல. மத்திய அரசு இப் போது வகுத்துள்ள திட்டத்தின் படி, ஆண்டுக்கு 20 சதவீதம் என்ற அளவில் அடுத்த 3 ஆண்டு களுக்கு 60 சதவீதம் அளவுக்கு யூரியா விலை உயர்த்தப்பட வுள்ளது. இதனால், இப்போது அதிகபட்சமாக ரூ.268-ஆக உள்ள ஒரு மூட்டை யூரியாவின் விலை அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.475-ஆக அதிகரிக்கும். அதன்பின்னர் விலை கட்டுப்பாடுகள் முழுமை யாக அகற்றப்பட்டு, உர நிறுவனங்கள் விருப்பம் போல விலை நிர்ணயம் செய்து கொள்ள அனுமதி அளிக்கப்படும். அத்தகைய சூழலில் யூரியாவின் விலை மூட்டைக்கு ரூ.600 என்ற அளவை எட்டக்கூடும் என்று வல்லுநர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். யூரியா வின் விலையை உயர்த் தினால் விவசாயிகள் பாதிக்கப் படுவார்கள்.

இதேநிலை தொடர்ந்தால் வேளாண் தொழில் அடியோடு அழிந்துவிடும் என்பதை அரசு உணர வேண்டும். யூரியா விலை உயர்த்தப்படுவது ஒருபுறமிருக்க, உணவுப் பொருட்களுக்கான மானியம் உள்ளிட்ட அனைத்து வகையான மானியங்களையும் படிப்படியாக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

மக்களுக்கு பயனளிக்கக் கூடிய மானியங்களை ரத்து செய்யும் திட்டத்தையும், யூரியா உரத்தின் மீதான விலை கட்டுப்பாட்டை நீக்கும் முடிவை யும் மத்திய ஆட்சியாளர்கள் கைவிட வேண்டும். இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x