Published : 30 Jan 2015 08:46 AM
Last Updated : 30 Jan 2015 08:46 AM

ஓராண்டை நிறைவு செய்திருக்கும் 104 இலவச மருத்துவ சேவை: சுமார் எட்டரை லட்சம் அழைப்புகளுக்கு தீர்வு

நல்வாழ்வுக்கான நம்பிக்கை, ஆலோசனைகள், தகவல்கள், உடல்நலம் மற்றும் மனநலம் உள்ளிட்ட சேவைகளை மக்களுக்கு இலவசமாக அளிக்கவும், மருத்துவ சேவை குறித்த புகார்களை தெரிவிக்கவும் தமிழக அரசு 30.12.13-ல் 104 சேவையை தொடங்கியது. இந்த சேவைக்கு இப்போது தினமும் சராசரியாக 3 ஆயிரம் அழைப்புகள் வருவதாக சொல்லப்படுகிறது.

அவசர சிகிச்சைகளுக்கான ஆலோசனை மற்றும் வழிகாட்டு தலையும் 104 சேவையில் வழங்குகிறார்கள். அரசு மருத்துவமனை கள், ஆரம்ப சுகாதார நிலைய குறைபாடுகளை இந்த எண்ணில் தெரிவித்தால் அவை சரிசெய்யப்பட்டு சம்பந்தப்பட்ட வர்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.

இதன் ஓராண்டு கால பணிகள் குறித்து 104 மற்றும் 108 சேவைக்கான விழிப்புணர்வு துறை மேலாளர் பிரபுதாஸ் கூறியதாவது: மற்ற மாநிலங்களில் 104 சேவை இருந்தாலும் புகார்கள் தெரிவிக்கும் வசதி தமிழகத்தில்தான் உள்ளது. புகார்களுக்கு உரிய தீர்வு எட்டப்படும் வரை புகார் அழைப்பை நாங்கள் முடிப்பதில்லை.

104 சேவைக்கு வரும் அழைப்புகளை நெறிப்படுத்த 54 ஊழியர்கள் 24 மணி நேரமும் பணிபுரிகிறார்கள். இவர்களைத் தொடர்புகொள்ள வசதியாக ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கி மருத்துவத் துறை இயக்குநர் அலுவலகம் வரை உள்ள மருத்துவ பணியாளர்களுக்கு சியுஜி இணைப்பு கொண்ட 2,611 கை பேசிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பொதுமக்களின் தேவைகளும் புகார்களும் கீழ் மட்டத்திலிருந்து சுகாதாரத் துறை அமைச்சர் வரைக்கும் கொண்டு செல்லப்பட்டுவிடும்.

வீட்டில் தனியாக இருக்கும் மூத்த குடிமக்களின் அவசர மருத்துவ சேவைகளுக்கும் வெளியூர் பயணம் மேற்கொள்பவர்கள் அந்த ஊர்களில் அவசர மருத்துவ சேவைக்கான இடங்களை அறிவதற்கும் எங்களை தொடர்பு கொள்ளலாம். தொற்று நோய்கள் பரவும்போது அதுகுறித்த உலக சுகாதார நிறுவனத்தின் விழிப்புணர்வு தகவல்களை 104 சேவை மூலம் பொது மக்கள் தெரிந்துகொள்ளலாம்.

கடந்த ஓராண்டில் 104 சேவைக்கு 8,59,294 அழைப்புகள் வந்துள்ளன. இதில் 3,12,175 பயனாளிகள் பயனடைந்துள்ள னர். சுகாதாரத் துறைக்கும் மக்க ளுக்கும் இணைப்புப் பாலமாக இருக்கும் 104 சேவையை இன்னும் அதிக மக்கள் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x