வார கடைசி நாளையொட்டி இன்று முதல் 3 நாட்களுக்கு 2,755 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: விரைவு போக்குவரத்து கழகம் அறிவிப்பு

வார கடைசி நாளையொட்டி இன்று முதல் 3 நாட்களுக்கு 2,755 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: விரைவு போக்குவரத்து கழகம் அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: வார இறுதி நாட்களை முன்னிட்டு அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் சார்பில் 2,755 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் 3 நாட்களுக்கு இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வார இறுதி நாட்களை யொட்டி சென்னையிலிருந்து பிற இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்து தமிழகம் முழுவதும் கூடுதல் பயணிகள் பயணம் செய்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையொட்டி விரைவுப் போக்குவரத்து கழகம் சார்பில் தினசரி பேருந்துகளுடன் கூடுத லாக சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை 890 பேருந்துகளும், நாளை சனிக்கிழமை 820 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுபோல் கோயம்பேட்டி லிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று 110 பேருந்துகளும், நாளை 110 பேருந்துகளும் இயக்கப்பட வுள்ளன.

மேலும், பெங் களூரு, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

மாதவரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி, திருவண்ணா மலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஓசூர், புதுச்சேரி ஆகிய

இடங்களுக்கு இன்று மற்றும் நாளை தலா 80 சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிறுக்கிழமை பயணிகள் சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்புவதற்காக தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் 465 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பேருந்து இயக்கத்தை கண் காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வார கடைசி நாளையொட்டி இன்று முதல் 3 நாட்களுக்கு 2,755 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: விரைவு போக்குவரத்து கழகம் அறிவிப்பு
தமிழகம் - ஆந்திரா இடையே சுமுகமாக மீன் பிடிக்க நடவடிக்கை: சட்டப்பேரவையில் அமைச்சர் ஸ்ரீநாத் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in