Published : 02 Jan 2015 10:34 AM
Last Updated : 02 Jan 2015 10:34 AM

கோயம்பேடு மார்க்கெட்டில் உரிமம் புதுப்பிக்காத 200 கடைகள் மீது நடவடிக்கை

கோயம்பேடு மார்க்கெட்டில் உரிமம் புதுப்பிக்காத 200 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அபராதத்துடன் உரிமக் கட்டணம் ரூ.1 கோடி வசூலிக் கப்பட்டுள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்டில் பூ, பழம், காய்கறி விற்பனைக்காக தனித்தனியாக 3 பிரிவுகள் உள்ளன. இதை சிஎம்டிஏ-வின் கீழ் இயங்கி வரும் மார்க்கெட் நிர்வாகக் குழு நிர்வகித்து வருகிறது. இந்த மார்க்கெட்டில் மொத்தம் 3,157 கடைகள் உள்ளன. இந்த கடைகளின் உரிமையாளர் கள், குறிப்பிட்ட பொருள்கள் விற்பனை சட்டம்- 1996ன்படி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை உரிமக் கட்டணம் செலுத்தி, கடை உரிமத்தை புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.

கடந்த 2012-ம் ஆண்டு கடைகளின் உரிமம் புதுப்பிக்கும் பணியை மார்க்கெட் நிர்வாகக் குழு தொடங்கியபோது 2,725 கடைகள் மட்டுமே புதுப்பித்துக்கொண்டன. மீதம் உள்ள 432 கடைகள் புதுப்பித்துக்கொள்ளவில்லை. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அடுத்த 3 ஆண்டுக்கான உரிமம் புதுப்பிக்கும் பணி நடைபெற உள்ளது.

இந்நிலையில் உரிமம் புதுப் பிக்காத 432 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கி, உரிமம் புதுப் பிக்க அறிவுறுத்தியும், அலட்சிய மாக இருக்கும் கடைகளுக்கு சீல் வைக்கும் பணியில் மார்க்கெட் நிர்வாகக் குழு அலுவலக அதிகாரி கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து மார்க்கெட் நிர்வாகக் குழு அலுவலக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “இதுவரை 200 கடைகளுக்கு உரிமம் புதுப்பிக்கப்பட்டு, அபராதக் கட்டணம் மற்றும் உரிமக் கட்டணமாக ரூ.1 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள கடைகளுக்கு உரிமம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x