Published : 16 Jan 2015 10:25 AM
Last Updated : 16 Jan 2015 10:25 AM

மெரினாவில் காணும் பொங்கல் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

காணும் பொங்கலை முன்னிட்டு மெரினா கடற்கரையில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

பொங்கல் பண்டிகை தமிழக மக்களால் 4 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கல் தினத்தன்று மெரினா கடற்கரை மக்கள் கூட்டத்தால் நிரம்பி இருக்கும். அன்றைய தினத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் மெரினா கடற்கரைக்கு வருவது வழக்கம். மக்களின் வசதிக்காக அன்றைய தினம் மெரினா காமராஜர் சாலையில் போக்குவரத்தும் தடை செய்யப்படும். இதனால் சாலைகளிலும் மக்கள் சாதாரணமாக நடமாடுவார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங் கல் தினத்தில் சுமார் 2 லட்சம் பேர் மெரினா கடற்கரைக்கு வருவார்கள். இந்த ஆண்டும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்ப தால் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய காவல் துறையினர் தயாராகி விட்டனர்.

காணும் பொங்கல் தினமான 17-ம் தேதி காலை 8 மணிக்கே மெரினா கடற்கரைக்கு மக்கள் வரத் தொடங்கிவிடுவார்கள். கட்டுக்கடங்காத வகையில் கூட்டம் வருவதால் அன்று கடலில் குளிக்க யாருக்கும் அனுமதி கிடையாது. கடற்கரை முழுவதும் தடுப்பு வேலி அமைக்கப்படும். அந்த தடுப்பை தாண்டி யாரும் கடலுக்குள் செல்லக்கூடாது. கடற்கரையில் 10 அடிக்கு ஒரு போலீஸ்காரர் வீதம் நிறுத்தப்பட்டு கடலுக்குள் யாரும் இறங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். காவல் துறையினர் குதிரைகளில் ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள். மெரினாவில் 4 இடங்களில் தற்காலிக காவல் உதவி மையம் அமைக்கப்படும்.

கூட்ட நெரிசலில் காணாமல் போகும் குழந்தைகளை கண்டுபிடிக்கவும் ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு தகவல்களைத் தெரிவிக்க ஒலிப்பெருக்கி வசதியும் செய்யப்படுகிறது. குற்றவாளி களை கண்டுபிடிக்க 20 ரோந்து குழுக்கள், அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ், 3 இடங் களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக் கப்படுகின்றன. இரவு 11 மணி வரை மக்கள் கூட்டம் இருக்கும் என்பதால் 3 இடங்களில் உயர்கோபுர மின் விளக்குகள் அமைக் கப்படுகின்றன. மக்கள் அதிகம் கூடும் 6 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை அமைத்தும், பலூனில் கண்காணிப்பு கேமராவை கட்டி பறக்கவிட்டும் கடற்கரை முழுவதும் கண்காணிக்க திட்ட மிடப்பட்டுள்ளது.

மேலும், பெசன்ட் நகர் எலியர்ட்ஸ் கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா ஆகிய இடங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் அங்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x