

தமிழக வேளாண்மைத் துறை 2014-15ம் ஆண்டின் தேசிய மின் ஆளுமைக்கான தங்க விருதை பெற்றுள்ளது. குஜராத் மாநிலம் காந்தி நகரில் நேற்று நடைபெற்ற 18-வது தேசிய மின் ஆளுமைக் கருத்தரங்கில், குஜராத் மாநில முதல்வர் ஆனந்திபென் படேல் இந்த விருதை வழங்கினார்.
இந்த விருதை முன்னாள் வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மைச் செயலர் சந்தீப் சக்சேனா, வேளாண்மை இயக்குர் ஏ.எம்.ராஜேந்திரன், குழு உறுப்பினர்கள் பி.வெங்கடா ஜலபதி, ஆர். ரகுராமன், எஸ்.சங்கர சுப்ரமணியம் மற்றும் பேராசிரியர் ஆர். வேங்கடாசலம் ஆகியோர் இணைந்து பெற்றுக்கொண்டனர்.
வேளாண் தகவல் சேவை இணையதளத்தில் மேம்படுத்தப் பட்ட சேவையாக உருவாக்கப்பட்ட பண்ணைப் பயிர் மேலாண்மை திட்டம் என்ற புதிய பண்ணை சார்ந்த அணுகுமுறைக்காக தற் போது இந்த விருது வழங்கப்பட் டுள்ளது. இது பண்ணை அளவில் தீர்வுகளை அளித்து உற்பத்தித் திறன் மற்றும் வருமானத்தை பெருக்க உதவும். இந்த திட்டம் அகில இந்திய அளவில் ஒரு முன்னோடி திட்டமாகும்.
இந்த வேளாண் தகவல் சேவை இணையதளத்தின் பண்ணைப் பயிர் மேலாண்மை திட்டத்தை, மத்திய அரசு இதர மாநிலங்களுக் கும் விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது.