மதுரை அருகே குடும்பப் பிரச்சினையில் ஆத்திரம்: மனைவி உட்பட 5 பேர் வெட்டிக் கொலை - ராணுவ வீரர் கைது

மதுரை அருகே குடும்பப் பிரச்சினையில் ஆத்திரம்: மனைவி உட்பட 5 பேர் வெட்டிக் கொலை - ராணுவ வீரர் கைது
Updated on
2 min read

மதுரை அருகே குடும்பப் பிரச்சினையில் ஆத்திரமடைந்த ராணுவ வீரர் தனது மனைவி, மாமனார், மாமியார் உட்பட 5 பேரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார். இது தொடர் பாக அவரைப் போலீஸார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம், பேரையூர் அருகே உள்ள அ.தொட் டியபட்டி கிராமத்தைச் சேர்ந் தவர் கமலக்கண்ணன்(35). இவர் ராணுவ வீரர். இவருக்கும், அ.தொட்டியபட்டி அருகே உள்ள மங்கல்ரேவு கிராமத்தைச் சேர்ந்த சின்னச்சாமி மகள் கோமதிக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

அதன்பிறகு கமலக் கண்ணனுக்கும், கோமதிக்கும் குடும்பப் பிரச்னை ஏற்பட்டது. இதனால் இவர்கள் இருவரும் பிரிந்து வசிக்கின்றனர். கமலக் கண்ணன் ராணுவத்தில் பணி புரிவதால் அவர் வெளியூர் சென்றார்.

கோமதி தனது தந்தை சின்னசாமி வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில், கமலக் கண்ணன் அண்மையில் விடு முறையில் ஊருக்கு வந்துள்ளார்.

இதுபோன்ற சூழ்நிலையில், சின்னச்சாமி, இவரது மனைவி ராமுத்தாய்(55), கோமதி(28), இவரது சகோதரிகள் வனரோஜா(23), பாக்கிய லெட்சுமி(35) ஆகியோர் தொட்டிய பட்டியில் நேற்று நடைபெற்ற உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் திருமணம் முடிந்து ஊர் திரும்புவதற்காக இரவு 8 மணி அளவில் அ.தொட்டியபட்டி கோயில் அருகே பஸ்ஸுக்காக சாலையில் காத்திருந்தனர்.

இதை அறிந்த கமலக் கண்ணன் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்துள்ளார்.

மாமனார் குடும்பத் தினருக்கும், கமலக்கண் ணனுக்கும் திடீரென வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கமலக் கண்ணன் தான் மறைத்து வைத்திருந்த பட்டாக் கத்தியால் மாமனார், மனைவி உள்பட 5 பேரையும் சரமாரியாக வெட்ட ஆரம்பித்தார். இதனால் பயந்துபோன அவர்கள் ஓட ஆரம்பித்தனர்.

இருப்பினும் கமலக்கண்ணன் அவர்களை ஓடஓட விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர்.

இவர்களை வெட்டும்போது பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த இரு உறவினர்கள் தடுத்தனர். அவர்களுக்கும் வெட்டுக் காயம் விழுந்தது.

இவர்கள் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே கமலக் கண்ணன் நடந்து சென்று அருகே உள்ள ஒரு கிராமத்தில் மறைந்து கொண்டதாகத் தெரிகிறது.

இத்தகவல் அறிந்த நாகையாபுரம் போலீஸார் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதாரி, பேரையூர் டிஎஸ்பி பாலசுப்பிரமணியன் ஆகியோர் சென்று கமலக்கண்ணனை கைது செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில் அவரிடம் துப்பாக்கி இருந்ததும், கமலக்கண்ணனும், கோமதியும் விவாகரத்து பெறும் முயற்சி நடைபெறுவதும் தெரிய வந்தது.

கோமதி உள்பட 5 பேருடைய சடலங்கள் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

இச்சம்பவத்தால் அப்பகுதி யில் பெரும் பதற்றம் நிலவுகிறது. மேலும் அசம்பாவிதம் நடை பெறாமல் தடுக்க அ.தொட்டிய பட்டி கிரா மத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் குவிக்கப்பட் டுள்ளனர்.

இது குறித்து நாகையாபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in