ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளரை ஆதரித்து விரைவில் விஜயகாந்த், பிரேமலதா பிரச்சாரம்: தமிழிசை சவுந்தரராஜன் தகவல்

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளரை ஆதரித்து விரைவில் விஜயகாந்த், பிரேமலதா பிரச்சாரம்: தமிழிசை சவுந்தரராஜன் தகவல்
Updated on
1 min read

சென்னை தி.நகரில் உள்ள தமிழக பாஜக தலைமையகமான கமலாலயத்தில் குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள சில கட்சிகள், பாஜக மீது காழ்ப்புணர்ச்சியுடன் குற்றம் சாட்டி வருகின்றன. குறிப்பாக மொழியை வைத்து பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வரு கின்றனர். அவை உண்மைக்கு மாறானவை. மத்திய பாஜக அரசு தமிழுக்குரிய அங்கீகாரத்தை கொடுத்து வருகிறது.

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் பாமகவினர் அவர்களது நிலைப்பாட்டை கூறியுள்ளனர். கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் எங்களை ஆதரிக்கின்றன. தேமுதிகவும் எங்களை ஆதரித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் பாஜக வேட்பாளரை ஆதரித்து விரைவில் பிரச்சாரம் மேற்கொள்வர்.

பாஜகவில் ஒரே நாளில் 50 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர். உறுப்பினர் சேர்க்கையில் விரைவில் எங்களது இலக்கை அடைவோம். ஊழலற்ற ஆட்சி, ஊழலற்ற நிர்வாகம் ஆகியவற்றை முன்வைத்து பிரச்சாரம் செய்வோம். தமிழகத்தில் திரா விடக் கட்சிகளுக்கு மாற்றாக பாஜக உருவெடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தியக் குடியரசு தின விழாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா பங்கேற்றிருப்பது மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது.

இவ்வாறு தமிழிசை கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in