

ஒவ்வொரு ஆண்டும் சுகாதார மின்மையால் உலகில் 5 வயதுக்குட் பட்ட 15 லட்சம் குழந்தைகள் இறப்பதாக தமிழகம்- கேரளத்துக் கான யுனிசெப் தூதர் நடிகர் நாசர் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி பழையப்பேட்டை உருதுப் பள்ளியில் நேற்று நடை பெற்ற சுகாதாரம் குறித்த விழிப் புணர்வுக் கூட்டத்தில் நாசர் மேலும் பேசியதாவது:
யுனிசெப் அமைப்பு உலக அளவில் பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டு வருகிறது. கடந்த காலங்க ளில் ஏரிகளில் தண்ணீர் நிரம்பி யிருந்தது. ஆனால், தற்போது கை, கால் நனைக்கக்கூட தண்ணீர் கிடையாது. ஏரியில் பிளாஸ்டிக் குப்பைகள் நிறைந்து நீர்நிலைகள் மாசடைந்துள்ளன.
பள்ளிக் குழந்தைகள் முதலில் கையைக் கழுவி சுத்த மாக வைத்துக்கொள்ளும் வழக்கத் தைக் கடைப்பிடிக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன் சோப்பு போட்டு கையைக் கழுவினால் தூசு, மாசு நம் உடலுக்குள் செல் லாது. கையைக் கழுவாமல் சாப்பிடு வதால் பல்வேறு நோய்கள் ஏற்படு கின்றன.
உலக அளவில் சுகாதாரம் இல் லாததால் 5 வயதுக்குட்பட்ட 15 லட்சம் குழந்தைகள் ஆண்டு தோறும் உயிரிழக்கின்றனர். இந்த உயிரிழப்பைக் குறைக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும். வீடுகளில் மற்ற அறை களை எவ்வாறு சுத்தமாக வைத்துக் கொள்கிறோமோ அது போலவே கழிவறையையும் சுத்த மாக வைத்துக் கொள்ள வேண் டும். பல கிராமங்களில் கழிவறை வசதி இருந்தும், பெரும்பாலா னோர் திறந்தவெளியையே பயன் படுத்துகின்றனர். இதனால் சுகா தாரம் கெட்டு, சமுதாயமே சீர்கெடு கிறது. பெண் குழந்தைகள் சுகா தாரத்தைப் பேணி, தைரியமான பெண்களாக உருவாக வேண்டும் என்றார் நாசர்.