

புழல் சிறையில் இசைக் கச்சேரியுடன் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. மேலும், பொங்கலை குடும்பத்தினருடன் கொண்டாடும் வகையில், தமிழகம் முழுவதும் 50 கைதிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 9 மத்திய சிறைகள், 3 பெண்கள் சிறைகள், இளம் குற்றவாளிகளுக்கான ஒரு சிறை உட்பட 136 சிறைகள் உள்ளன. இவற்றில், தற்போது 14,000 கைதிகள் உள்ளனர்.
குடும்பத்தினருடன் சேர்ந்து பொங்கலைக் கொண்டாடுவதற்காக நூற்றுக்கணக்கான கைதி கள் விடுமுறை கேட்டு விண்ணப் பித்திருந்தனர். அவர்களில் சிறை அதிகாரிகளிடம் இருந்து நன்ன டத்தைச் சான்றிதழ் பெற்ற 50 கைதிகள் தேர்தெடுக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டது.
இசைக் கச்சேரி
தமிழகத்தில் அதிகபட்சமாக புழல் சிறையில் 2,300 கைதிகள் உள்ளனர். பொங்கல் பண்டிகையை யொட்டி, நாளை (ஜன. 16) மாலை இங்கு இசைக் கச்சேரி நடத்தப்படுகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் சிறைகளில் உள்ள கைதிகளில் நன்றாக பாடுபவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, புழல் சிறைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.