Published : 23 Jan 2015 09:57 AM
Last Updated : 23 Jan 2015 09:57 AM

பிப்.14-ல் மதுரையில் இருந்து ஜோதிர்லிங்க யாத்திரை ரயில்: ஐஆர்சிடிசி அறிவிப்பு

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் (ஐஆர்சிடிசி) கூடுதல் பொதுமேலாளர் ரவிக்குமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடந்த 2014-15 நிதிநிலை அறிக்கையில் மத்திய ரயில்வே அமைச்சர் அறிவித்தபடி பல்வேறு புகழ்பெற்ற இடங்களுக்கு சிறப்பு யாத்திரை ரயில்கள் மூலம் சுற்றுலா பேக்கேஜ்களை ஐ.ஆர்.சி.டி.சி நிறைவேற்றி வருகிறது.

சிறப்பு யாத்திரை ரயில்களில் 7 ஸ்லீப்பர் பெட்டிகள், 5 ஏசி பெட்டி கள் உட்பட மொத்தம் 13 பெட்டி கள் இருக்கும். சைவ உணவு தயாரித்து வழங்க தனியே பேன்ட்ரி கார் இணைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நவஜோதிர் லிங்க யாத்திரை மதுரையில் வரும் பிப்ரவரி 14-ம் தேதி புறப்பட்டு ஈரோடு, சேலம் மற்றும் சென்னை சென்ட்ரல் வழியாக சைலம் செல்கிறது. இதன் மொத்த சுற்றுலாப் பயண நாட்கள் 14 ஆகும். ஸ்டாண்டர்டு கட்டணம் ரூ.12,740, கம்பர்டு கட்டணம் ரூ.27,580, டீலக்ஸ் பிரிவுக்கு ரூ.37,100 கட்டணமாகும்.

குரு கிருப யாத்திரை

அதேபோல பிப்ரவரி 5-ல் குரு கிருப யாத்திரை மதுரையில் புறப்பட்டு திருச்சி, தஞ்சாவூர், கும்ப கோணம், கடலூர், விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாக மந்த்ராலயம், பண்டரிபுரம் செல் கிறது. பயண நாட்கள் மொத்தம் 7 ஆகும். ஸ்டாண்டர்டு கட்டணம் ரூ.6,370, கம்பர்டு கட்டணம் ரூ.13,790, டீலக்ஸ் பிரிவுக்கு ரூ.18,550 கட்டண மாகும். மேலும், தகவல்களுக்கு சென்னை மற்றும் புதுச்சேரி 044-64594959, 9840902916, 9003140681 காட்பாடி, 9840948484 மதுரை 9003140714, 9840902915, கோவை 9003140680.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x