

ஐஆர்என்எஸ்எஸ்-1டி வழிகாட்டி செயற்கைகோள் மார்ச் மாதத்தில் விண்ணில் செலுத்தப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் ‘இந்திய மண்டல வழிகாட்டி செயற்கைகோள் முறை’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதற்காக இந்திய வழிகாட்டி அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் தரைவழி, வான் வழி மற்றும் கப்பல் போக்குவரத்தை கண்காணிப்பதற்காக 7 வழிகாட்டி செயற்கைகோள்களை விண்ணில் ஏவ இந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத் தின்படி ஏற்கெனவே, ஐஆர்என் எஸ்எஸ்-1ஏ, ஐஆர்என்எஸ்எஸ்-1பி, ஐஆர்என்எஸ்எஸ்-1சி, ஆகிய 3 செயற்கைகோள்களை அனுப்பியுள்ளது.
இந்நிலையில் ஐஆர்என் எஸ்எஸ்-1டி செயற்கைகோள் இந்தாண்டு மார்ச் மாதத்தில் விண்ணில் ஏவப்படவுள்ளது. இதற்கான அறிமுக நிகழ்ச்சி வரும் 16-ம் தேதி நடக்கவுள்ளது. இன்னும் 2 மாதங்களில் இதற்கான சாதனங்கள் பிற இஸ்ரோ மையங்களிலிருந்து ஸ்ரீஹரிகோட்டாவுக்கு கொண்டு வரப்படவுள்ளன. இதற்கடுத்த நிலையில் உள்ள ஐஆர்என் எஸ்எஸ்-1இ , ஐஆர்என்எஸ்எஸ்-1எஃப் மற்றும் ஐஆர்என்எஸ்எஸ்-1ஜி ஆகிய செயற்கைகோள்கள் இந்தாண்டு இறுதிக்குள் விண்ணில் ஏவப்படும். இதன் மூலம் ‘இந்திய மண்டல வழிகாட்டி செயற்கைகோள் முறை’ நிறைவடையும் என்று இஸ்ரோ அதிகாரிகள் கூறியுள்ளனர். இதன் திட்ட மதிப்பீடு ரூ.1,422 கோடியாகும்.