Published : 04 Dec 2014 10:05 AM
Last Updated : 04 Dec 2014 10:05 AM

சென்னை-விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு சிறப்பு ரயில்

திருவண்ணாமலை தீபத் திரு விழாவை முன்னிட்டு இன்றும் நாளையும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

திருவண்ணாமலை தீபத் திருவிழா நாளை (5-ம் தேதி) நடை பெற உள்ளது. இந்நிலையில், பக்தர்களின் வசதிக்காக திருச்சி ரயில்வே கோட்டம் சார்பில் சென்னை சென்ட்ரல் மற்றும் விழுப் புரத்தில் இருந்து இன்றும், நாளையும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்படும் ரயில் பகல் 3.15 மணிக்கு திருவண்ணாமலை வந்து சேரும். மறுமார்க்கத்தில் இரவு 10 மணிக்கு அங்கிருந்து புறப்படும் ரயில் அதிகாலை 3.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும். இந்த ரயிலில் இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் 8 இணைக்கப் பட்டுள்ளன. பெரம்பூர், திருவள் ளூர், அரக்கோணம், சோளிங்கர், வாலாஜா ரோடு, முகுந்தராய புரம், காட்பாடி, வேலூர் கன்டோன் மென்ட், கணியம்பாடி, கண்ணமங் கலம், ஆரணி ரோடு, போளூர், அகரம் மற்றும் துரிஞ்சாபுரத்தில் இந்த ரயில் நின்று செல்லும்.

விழுப்புரம் ரயில் நிலை யத்தில் இருந்து காலை 9.20 மணிக்கு புறப்படும் ரயில் திரு வண்ணாமலைக்கு பகல் 11.30 மணிக்கு வந்துசேரும். மறுமார்க் கத்தில் 1.30 மணிக்கு புறப்படும் ரயில் மாலை 3.45 மணிக்கு விழுப் புரம் சென்றுசேரும். இந்த ரயிலில் 2-ம் வகுப்பு 7 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ரயில் விழுப்புரம்-திருவண்ணாமலை இடையிலான அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.

அதேபோல, மற்றொரு சிறப்பு ரயில் விழுப்புரத்தில் இருந்து காலை 11 மணிக்கு புறப்பட்டு பகல் 12.50 மணிக்கு திருவண்ணாமலை வந்துசேரும். மறுமார்க்கத்தில் 3.10 மணிக்கு புறப்படும் ரயில் மாலை 4.55 மணிக்கு விழுப்புரம் சென்றடையும். இந்த ரயிலில் 2-ம் வகுப்பு பெட்டிகள் 6 இணைக்கப்பட்டுள்ளன. அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.

மேலும், வழக்கமாக விழுப் புரம்-காட்பாடி இடையில் இயக்கப் படும் பயணிகள் ரயில், திருப்பதி-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் இன்றும், நாளையும் திருவண்ணா மலை ரயில் நிலையத்தில் 20 நிமிடங்கள் நின்று செல்லும் என்று திருச்சி கோட்ட ரயில் நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x