

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தேனி மாவட்டம் கடமலைக் குண்டு, வருசநாடு மலை வனப் பகுதியில் பதுங்கியிருந்த நக்ஸலைட்களை கியூ பிரிவு மற்றும் உள்ளூர் போலீஸார் கைது செய்தனர்.
கடந்த வாரம் இடுக்கி மாவட் டம், வயல்நாடு பகுதியில் நக்ஸலைட்களுக்கும், கேரள போலீஸாருக்கும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. ஆனால், நக்ஸலைட்கள் தப்பிவிட்டனர்.
இந்நிலையில், கூடலூரைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமிழக- கேரள மேற்குத் தொடர்ச்சி பகுதி எல்லையான குமுளி வனப் பகுதிக்கு நேற்று புல் அறுக்கச் சென்றபோது, கருப்பு உடையணிந்திருந்த 10-க்கும் அதிகமானோர் ஆயுதங்க ளுடன் தீ மூட்டி குளிர் காய்ந்துக் கொண் டிருந்ததைக் கண்டனராம். இதுகுறித்து தொழிலாளர்கள் கட்டப்பனை காவல் நிலையத் துக்குத் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, எஸ்ஐ ரெஜீன் தலைமையிலான போலீஸார் தொழிலாளர்கள் குறிப்பிட்ட அந்த வனப் பகுதிகளில் நக்ஸல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.