வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு
Updated on
1 min read

மதுரை மாவட்டத்திலுள்ள வைகை அணையிலிருந்து வைகை பழைய பாசன பகுதி ஐ-ன் கீழ் உள்ள நிலங்களுக்குப் பாசனத்திற்காக நாளை முதல் தண்ணீர் திறந்து விடுமாறு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " மதுரை மாவட்டத்திலுள்ள வைகை அணையிலிருந்து வைகை பழைய பாசன பகுதி ஐ-ன் கீழ் உள்ள நிலங்களுக்குப் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயப் பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

விவசாயப் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, மதுரை மாவட்டத்திலுள்ள வைகை அணையிலிருந்து வைகை பழைய பாசன பகுதி ஐ-ன் கீழ் உள்ள நிலங்களுக்குப் பாசனத்திற்காக 10.12.2014 முதல் தண்ணீர் திறந்து விட ஆணையிடப்படுகிறது.

இதனால், மதுரை மாவட்டத்தில் உள்ள 27,259 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்" என கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in