Published : 19 Dec 2014 09:05 AM
Last Updated : 19 Dec 2014 09:05 AM

ஐஏஎஸ் மற்றும் காவல்துறை அதிகாரிகளால் போலீஸிடமிருந்து தப்பிய கைதி தவமணி உயிருக்கு ஆபத்து?-காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பு தகவல்

புனே நீதிமன்றத்துக்குச் சென்று தமிழகம் திரும்பும் வழியில் போலீஸ் பாதுகாப்பில் இருந்து 3 வாரங்களுக்கு முன்பு தப்பிச் சென்ற ஆயுள் தண்டனை சிறைக் கைதி தவமணியின் உயிருக்கு ஐஏஎஸ் அதிகாரி மற்றும் டிஎஸ்பி ஆகியோரால் ஆபத்து உள்ளதாகவும், தவமணி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் காவல்துறை வட்டாரத்தில் பரபரப் பாக பேச்சு உலவுகிறது.

பண்ருட்டி அருகே பத்திரக் கோட்டையைச் சேர்ந்த தவமணி கடலூரில் நிகழ்ந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றார். டிஎன்பிஎஸ்சி தேர்வு வினாத்தாள் வெளியான வழக்கிலும் அவர் குற்றம் சாட்டப் பட்டுள்ளார். போலீஸ் பிடியிலி ருந்து தப்பிய அவர், கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் மறைத்து வைத்திருப்பதாகக் கூறப்படும் ரூ.300 கோடியை எடுக்க எப்படியும் அங்கே வரக் கூடும் என கணித்துள்ள தனிப் படை போலீஸாரில் ஒரு குழு பண்ருட்டி யில் முகாமிட்டுள்ளது.

பண்ருட்டியில் தவமணியின் சொந்த ஊரான பத்திரக்கோட்டை யைச் சேர்ந்த சுமார் 75 பேர் தமிழக அரசு ஊழியர்களாக கடந்த சில ஆண்டுகளில் தேர்வாகி அரசு பதவிகளை அலங்கரிக்கக் காரணம், தவமணி முன்கூட்டியே அவர்களுக்கு வழங்கிய டிஎன்பி எஸ்சி வினாத்தாள்தான் என்று கூறப்படுகிறது.

அதனால் அந்த நபர்களில் யாரேனும் தவமணிக்கு அடைக்கலம் கொடுத்திருக்கலாம் என்ற கோணத்தில் சிந்திக்கும் போலீஸார், அவர்களது வசிப் பிடங்களில் கண்காணிப்பை தீவிரப் படுத்தியுள்ளதாகவும் கூறப்படு கிறது.

திரைப்பட பிரபலம் ஒருவரின் சகோதரர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலரது தொடர்பு தவமணிக்கு இருந்ததாகவும் அதனால்தான் அவரது திரை மறைவு நடவடிக்கைகள் நீண்ட காலமாக வெளிச்சத்துக்கு வராம லேயே போனதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வட மாவட்டங்களில் செல்வாக் குள்ள ஒரு அரசியல் கட்சியிலி ருந்து தனியாகப் பிரிந்து சென்று தனிக்கட்சி தொடங்கிய ஒரு அரசியல் பிரபலம், முறை கேடாக பணம் சம்பாதித்து வந்த தவமணியை மிரட்டி அவரிட மிருந்து ரூ.9 கோடி பணம் வாங்கிய தாக, தனிப்படையிடம் சிக்கியுள்ள தவமணியின் நண்பர்கள் விசாரணையில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தவமணிக்கு நெருக்கமான ஐஏஎஸ் அதிகாரி மற்றும் போலீஸ் டிஎஸ்பி ஆகியோர், தப்பிச் சென்ற தவமணி போலீஸில் சிக்கினால் தங்களைப் பற்றிய பல விவரங்கள் அம்பலமாகிவிடும் என்பதால் தவமணியை தீர்த்துக்கட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் போலீஸார் சந்தேகிப்பதாக கூறப்படுகிறது.

உயிருடன் இருக்க வாய்ப்பு குறைவு

இப்போதைய நிலவரப்படி தவமணி உயிருடன் இருப்பதற்கு வாய்ப்புக் குறைவு அல்லது அவரது உயிருக்கு ஆபத்து அதிகம் என்பதை புரிந்துகொண்டு போலீஸார் கவனமாக விசார ணையை மேற்கொள்ள வேண்டும் என்று உளவுப்பிரிவு போலீஸார் தெரிவிக்கின்றனர்.

தவமணியின் நெருங்கிய நண்பர்களும் ரவுடிகளுமான 3 பேரை வசப்படுத்தியுள்ள தனிப் படை போலீஸார், அவர்கள் மூலம் பல தகவல்களைப் பெற்று வருவதாக தெரிகிறது. திருச்சி யில் தனியார் விடுதி ஒன்றில் போலீ ஸின் பாதுகாப்பில் இருந்த 3 பேரில் ஒருவர் தற்கொலைக்கு முயன் றுள்ளார். அவரை காப்பாற்றிய போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x