

திராவிடர் கழகத் தலைவர், கி.வீரமணி பிறந்தநாளையொட்டி அவருக்கு திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கி. வீரமணியின் 82வது பிறந்த நாளையொட்டி என் சார்பிலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது பிறந்த நாளை தற்போது நினைவுகூர்ந்திடும்போது எத்தனையோ பசுமையான நினைவுகள்!
தந்தை பெரியார் அவர்கள் மறைந்த போது, திராவிடர் கழகம் இனியும் என்னவாகுமோ என்ற நினைப்பு ஒரு சிலருக்கு ஏற்பட்டது உண்டு. அவர்களுக்கெல்லாம் பதிலளிக்கும் வகையில், தந்தை பெரியார் அவர்களின் கொள்கை கோட்பாடுகளை, லட்சியத்தை, பகுத்தறிவு பிரச்சாரத்தை, சமுதாய எழுச்சிக்காகவும், மேம்பாட்டுக்காகவும் உயர்த்திப் பிடித்து, அதை அவனியெங்கும் பரப்புகின்ற பணியில் அயராது தொண்டாற்றி வரும் இளவல் வீரமணி அவர்கள் மேலும் பல்லாண்டு காலம் நல்ல உடல் நலத்தோடு பணியாற்றிட அவருக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.