

போலீஸார் நடத்திய வாகன சோதனையில் பைக் திருடிய நபர், கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை பாரிமுனை பிரகாசம் சாலையில் முத்தியால்பேட்டை போலீஸார் திங்கள்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை பிடித்து விசாரித்தபோது, அவர் ஓட்டி வந்தது திருட்டு மோட்டார் சைக்கிள் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் பிடிபட்டவரின் பெயர் மோகன்(29), என்பதும் அவர் வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவர் திருடி பதுக்கி வைத்திருந்த மூன்று மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் திங்கள்கிழமை இரவில் எம்கேபி நகர் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த ஆறுமுகம், பேபி(52) ஆகியோர் வைத்திருந்த பையில் ஒன்றரை கிலோ கஞ்சாவும், ரூ.58 ஆயிரம் பணமும் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.