Published : 07 Dec 2014 12:01 PM
Last Updated : 07 Dec 2014 12:01 PM

தென் மண்டல ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப்: தமிழக அணிகளுக்கு வெள்ளிப் பதக்கம்

36-வது தென் மண்டல அளவி லான ஹேண்ட்பால் சாம்பியன் ஷிப் போட்டியில் தமிழக ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் வெள்ளிப் பதக்கம் வென்றன. தொடர்ந்து 4-வது ஆண்டாக தமிழக ஆடவர் அணி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது.

கர்நாடக மாநிலம் மங்களூரில் 3 நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி, கோவா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய 7 அணிகள் பங்கேற்றன. இதில் ஆடவர் பிரிவு இறுதிப் போட்டியில் தமிழக அணி 29-34 என்ற கோல் கணக்கில் கர்நாடக அணியிடம் தோற்றது. இதனால் கர்நாடக அணிக்கு தங்கப் பதக்கமும், தமிழக அணிக்கு வெள்ளிப் பதக்கமும் கிடைத்தன.

மகளிர் பிரிவு இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான தமிழக அணி 18-26 என்ற கோல் கணக்கில் கேரளத்திடம் தோல்வி கண்டது. இதனால் கேரளத்துக்கு தங்கப் பதக்கமும், தமிழகத்துக்கு வெள்ளிப் பதக்கமும் கிடைத்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x