Published : 02 Dec 2014 10:08 AM
Last Updated : 02 Dec 2014 10:08 AM

குழந்தையை பார்க்க தாய்க்கு மட்டும் அனுமதி: 64 பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவுகளில் கண்காணிப்பு கேமரா - உள்ளே வர உறவினர்களுக்கு மறுப்பு; டிவி மூலம் பார்க்கலாம்

அனைத்து மருத்துவமனை பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவுகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படு கின்றன. உறவினர்கள் உள்ளே வருவதற்கு அனுமதி மறுக்கப்பட் டுள்ளது. வெளியில் இருந்து டிவி மூலம் குழந்தையை பார்த்துக் கொள்ளலாம்.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடர்ச்சியாக 11-க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் உயிரி ழந்தன. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள 64 பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியின்போது, மாநில பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு திட்ட இயக்குநர் சீனிவாசன் கூறியதாவது:

தொற்றுநோய் பரவுவதால்

தமிழகத்தில் 64 பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவுகள் உள்ளன. குறைப்பிரசவம், எடை குறைவாக பிறத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் பாதிக் கப்பட்ட குழந்தைகள், இந்த சிகிச்சைப் பிரிவில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகளைப் பார்க்க உறவினர்கள் உள்ளே வருவதால், சிகிச்சைப் பிரிவில் நோய் தொற்று ஏற்படுகிறது. அதனால் இந்த சிகிச்சைப் பிரிவில் குழந்தையுடன் தாய் மட்டும் இருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தந்தையை சில குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் அனுமதிப்போம்.

ரூ.1.20 லட்சம் செலவு

பச்சிளம் குழந்தைகள் பிரிவுகளில் ரூ.1.20 லட்சம் செலவில் கண்காணிப்பு கேமராக் கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

மருத்துவமனை வளாகத்தில் பெரிய அளவிலான தொலைக் காட்சிப்பெட்டிகள் வைக்கப் படுகின்றன. தினமும் காலை 10 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் 5 மணி வரையும் செவிலியர்கள் குழந்தைகளை தூக்கி வந்து கேமராவில் காண்பிப் பார்கள். வெளியில் காத்திருக் கும் உறவினர்கள் டிவி மூலம் குழந்தையை பார்த்துக் கொள்ளலாம். தருமபுரி, சேலம், நாமக்கல் அரசு மருத்துவ மனைகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இன்னும் ஒரு வாரத்தில், அனைத்து பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவிலும் இந்த முறை செயல்படத் தொடங்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x