

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குரூப்-4-ல் அடங்கிய 4,963 காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு வருகிற 21-ம் தேதி நடைபெற உள்ளது. இத் தேர்வுக்கு 12.75 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
சரியான முறையில் விவரங்களைப் பதிவுசெய்து விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக் கூட நுழைவுச்சீட்டு (ஹால் டிக்கெட்) பின்வரும் இணைய தள முகவரிகளில் வெளியிடப் பட்டுள்ளன.
www.tnpsc.gov.in
www.tnpscexams.net
விண்ணப்பதாரர்கள் தங்கள் பதிவு எண்ணை குறிப்பிட்டு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் 1800-425-1002 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
நுழைவுச்சீட்டு கிடைக்கப் பெறாதவர்கள் தங்கள் விண்ணப் பம் நிராகரிப்பு பட்டியலில் உள்ளதா என்பதை கண்டறியுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.