

நடக்க முடியாமல் கொருக்குப்பேட்டை பகுதியில் தெருவில் படுத்துக் கிடந்த மூதாட்டி ‘வாட்ஸ் அப்’ உதவியால் மீட்கப்பட்டுள்ளார்.
சென்னை கொருக்குப்பேட்டை மேற்கு கிருஷ்ணப்ப கிராமணி தெருவில் குப்பை தொட்டி அருகில் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் கடந்த 4 நாட்களாக படுத்துக் கிடந்தார். சாப்பிடாமல் உடல் மெலிந்து பரிதாபமான நிலையில் அவர் இருந்தார்.
பலர் அவரை பார்த்துவிட்டு கண்டுகொள்ளாமல் சென்ற நிலையில் அந்த வழியாக சென்ற ஒருவர் தனது செல்போனில் அந்த மூதாட்டியை படம் பிடித்து, ‘ஒரு தாயின் அவலத்தை பாருங்கள்' என்று ‘வாட்ஸ் அப்’ மூலம் அந்த புகைப்படத்தை தனது நண்பர்களுக்கு அனுப்பினார்.
அந்த தகவல் போலீஸ் அதிகாரி களின் செல்போன்களிலும் புகுந்தது. உடனே போலீஸ் கட்டுப் பாட்டு அறை மூலம் 108 ஆம்புலன் சுக்கு தகவல் தெரிவிக்கப்பட, அவர்கள் விரைந்து சென்று அந்த மூதாட்டியை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.
தனது பெயரை அமுதா என்று மட்டும் கூறும் அந்த மூதாட்டிக்கு தனது சொந்தங்கள் குறித்த எந்த தகவலும் நினைவில் இல்லை.