

திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த திருவாரூர், கடலூர், தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கான மாவட்ட செயலாளர் தேர்தலில் 8 பேர் வெற்றி பெற்றனர்.
திமுகவின் 65 மாவட்டங்களில் பிரச்சினைக்குரிய 30 மாவட்டங்க ளுக்கான செயலாளர்களை தேர்ந் தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 3 தினங்களாக நடக்கிறது. திருவாரூர், கரூர், தேனி, நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு, கோவை வடக்கு, கோவை தெற்கு ஆகிய 8 மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தல் நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.
இந்த தேர்தலில் திருவாரூர் மாவட்ட செயலாளராக பூண்டி கலைவாணனும், கரூர் மாவட்ட செயலாளர் தேர்தலில் நன்னியூர் ராஜேந்திரனும், தேனி மாவட்ட செயலாளராக எல்.மூக்கையாவும், தருமபுரி மாவட்ட செயலாளராக தடங்கம் சுப்ரமணியும், நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக ஜெ.காந்திசெல்வனும், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளராக கே.எஸ்.மூர்த்தியும், கோவை வடக்கில் வீரகோபால், கோவை தெற்கில் நாச்சிமுத்துவும் வெற்றி பெற்றனர்.