Last Updated : 01 Dec, 2014 09:26 AM

 

Published : 01 Dec 2014 09:26 AM
Last Updated : 01 Dec 2014 09:26 AM

ஐஎஸ், அல்காய்தா அமைப்புகளால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல்: புலனாய்வுத் துறை இயக்குநர் தகவல்

ஐஎஸ், அல் காய்தா போன்ற தீவிரவாத அமைப்புகளால் இந்தியாவுக்கு பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதேசமயம் இந்திய முஸ்லிம் சமூகத்தினர் இந்த அமைப்புகளை புறக்கணித்திருப்பது ஆறுதலான விஷயம் என இந்திய புலனாய்வு அமைப்பின் இயக்குநர் ஆசிப் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலம் குவாஹாட்டில், காவல்துறை தலைவர்கள், காவல்துறை தலைமை இயக்குநர் கள் இரண்டு நாள் மாநாடு நடை பெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சில மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்றனர். இக் கூட்டத்தில் புலனாய்வுத் துறை இயக்குநர் ஆசிப் இப்ராஹிம் பேசியதாவது:

ஐஎஸ் அமைப்பு ஒருபுறம் வேகமாக நிலப்பரப்பை கைப்பற்றி வருவதுடன் பிரசித்தியும் பெற்று வருகிறது. மறுபுறம் அதன் பலம் அதிகரித்து வருகிறது. 80-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர் கள், இராக், சிரியாவில் போர் நடை பெறும் பகுதிக்குச் சென்று அங்கு ஐஎஸ் சார்பில் ஆயுதப் போராட்டத் தில் ஈடுபடுகின்றனர்.

ஐஎஸ் தீவிரவாத அமைப் பில் இந்திய இளைஞர்கள் இணை வதும், அங்கிருந்து நாடு திரும்பு வதும் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. ஐஎஸ் மற்றும் அல் காய்தா அமைப்புகளை முக்கியத்துவம் கொடுத்து கையாளாவிட்டால் அவை இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகுந்த அச்சுறுத்தலாகி விடும்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ் தானை மையமாகக் கொண்டு செயல்படும் இந்தியன் முஜாகிதீன் அமைப்பு, ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்தி யாவைக் குறி வைத்து தாக்கு வதற்காக புதிய கிளையை அமைத் துள்ளதாக அல்காய்தா அறிவித் துள்ளது.

இந்திய முஸ்லிம்கள்

இந்தியாவில் பெரும் எண்ணிக் கையில் முஸ்லிம்கள் வசித்தாலும், உலக ஜிகாதி நடவடிக்கைகள் இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மேற்கத்திய நாடுகளைப் போலன்றி, உள்ளூர் தலையீடுகள், சரியான நேரத்தில் வழங்கப்படும் ஆலோசனைகள் உள்ளிட்டவை தீவிரவாத இயக்கத் தில் சேர்வதைத் தடுத்து நிறுத்தி யுள்ளன.

இந்தியாவிலுள்ள பிரதான முஸ்லிம் பிரிவுகள், அமைப்புகள், பயிற்சிப் பள்ளிகள், மத குருக்கள் ஐஎஸ் அமைப்பின் பிரகடனத் தைப் புறக்கணித்திருப்பதுடன், அந்நடவடிக்கைகள் இஸ்லா முக்கு எதிரானவை எனவும் அறிவித்துள்ளன.

பாகிஸ்தானின் முயற்சியாலும், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஸ் இ முமகது, சிமி போன்ற இயக் கங்கள் இந்தியாவில் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் பல தலைவர்கள் கைது செய்யப்பட்டி ருப்பதால், அதுபோன்ற அமைப்பு களை பாதுகாப்புப் படையினர் முடக்கி வருகின்றனர். இவ்வாறு, அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x