

மயிலாப்பூரில் கட்டிடத்தை இடிக்கும் போது பொக்லைன் இயந்திரத்தில் இருந்து தொழிலாளியின் மீது கல் விழுந்ததால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை மயிலாப்பூர் முத்து தெருவில் உள்ள பழமையான இரண்டு மாடிக் கட்டிடத்தை இடிக்கும் பணி நடந்து வரு கிறது. பொக்லைன் இயந்திரம் மூலம் அந்த கட்டிடம் இடிக்கப்பட்டது. அப்போது ஒரு பெரிய கல்லை பொக்லைன் இயந்திரத்தில் தூக்கி அப்புறப்படுத்தும் முயற்சியில் பொக்லைன் டிரைவர் சூரியகுமார் ஈடுபட்டார்.
அப்போது திடீரென கல் நழுவி அருகில் நின்ற கிளீனர் முருகன் மீது விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். மயிலாப்பூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.