

கிரானைட் முறைகேட்டை விசாரிக்கும் உ. சகாயத்துக்கு அரசு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியது.
மதுரையில் நேற்று கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் இ.எம். ஜோசப் தலைமையில் நடைபெற்ற மாநகர் மாவட்டக் குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிரானைட் குவாரி கள் முறைகேடுகள் குறித்து விசாரித்து வரும் உ. சகாயம் தலைமையிலான விசா ரணைக் குழு தங்கியிருந்த விடுதி மற்றும் விசாரணை அறைகளில் ஒட்டுக்கேட்பு கருவி பொருத்தப்பட்டிருந்ததாக புகார் எழுந்தது. மேலும், அண்மையில் அவருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. எனவே, சகாயத்துக்கு அரசு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநிலச் செயற்குழு உறுப்பினர் எம்என்எஸ். வெங்கட்ராமன், மாவட்டச் செயலர் பா. விக்ரமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.