Published : 09 Dec 2014 09:47 AM
Last Updated : 09 Dec 2014 09:47 AM

இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டவை: 83 படகுகள் திரும்ப கிடைக்காததற்கு பாஜக அரசே முக்கிய காரணம் - தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் குற்றச்சாட்டு

இலங்கை கடற்படையால் பறி முதல் செய்யப்பட்ட 83 படகுகள் திரும்ப ஒப்படைக்கப்படாததற்கு பாஜக அரசே காரணம் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக மீனவர் பிரச்சினையில் நரேந்திர மோடியைத் தவிர, வேறு யாரும் நிரந்தர தீர்வை பெற்றுத் தர முடியாது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித் துள்ளார். மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழாவின்போது, ராஜபக்சவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டதே மீனவர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் இலங்கை அரசு கடுமையான நிலையை எடுக்க காரணமாக அமைந்துவிட்டது.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், தமிழக மீனவர்கள் இலங்கை கடற் படையினரால் கைது செய்யப் பட்டு விடுவிக்கப்படும்போது, படகுகளும் திரும்ப ஒப்படைக்கப் படும். ஆனால், பாஜகவின் சூத்திர தாரியாக செயல்பட்டு வரும் சுப்பிரமணியன் சுவாமியின் ஆலோசனைப்படி, தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டார்கள். ஆனால், பறிமுதல் செய்யப்பட்ட 83 படகுகள் திரும்ப ஒப்படைக்கப் படவில்லை. இதற்கு பாஜக அரசே காரணம்.

விரோதப் போக்கு

கடந்த காலத்தில் இலங்கை தூதரகத்தின் முன்பு, ராஜபக்ச வின் கொடும்பாவியை பாஜக வினர் எரித்தனர். ஆனால், தற்போது ராஜபக்சவுக்கு பாரத ரத்னா வழங்க சுப்பிரமணியன் சுவாமி பரிந்துரைக்கிறார். இதை மறுத்தோ, கண்டித்தோ பாஜக தலைமை ஒரு வார்த்தைக் கூட கூற வில்லை. இதைவிட ஒரு வெட்கக் கேடான, தமிழர் விரோதப்போக்கு வேறு எதுவும் இருக்க முடியாது.

கச்சத்தீவை அன்றைய பிரதமர் இந்திராகாந்தி இலங்கை அரசுக்கு தாரை வார்த்ததாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகிறார். கச்சத்தீவை இலங் கையில் வாழுகிற லட்சக்கணக் கான தமிழர்களின் நலனுக்காக வும், அண்டை நாடான இலங்கை யோடு நட்புறவு கொள்ளும் நோக்கி லும்தான், 1974-ல் இந்திராகாந்தி வழங்கினார். இதை, வாஜ்பாய் அரசும் முற்றிலும் ஏற்றுக்கொண்டு, திரும்பப் பெறுவதற்கான எந்த முயற்சியிலும் ஈடுபட்டதில்லை. எனவே, கச்சத்தீவு பிரச்சினையில் காங்கிரஸ் கட்சியை குற்றம் சுமத்தி பேசுவது அப்பட்டமான சந்தர்ப்பவாதமாகும் என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x