

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பச்சிளம் குழந்தைகள் தொடர்ச்சியாக உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையிலான குழுவினர் ஒவ்வொரு அரசு மருத்துவ மனையாகச் சென்று ஆய்வு செய்துவருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், துறைச் செயலாளர் ராதாகிருஷ் ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் கீதாலட்சுமி ஆகியோர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நேற்று ஆய்வு செய்தனர். சில வார்டுகளுக்குச் சென்று நோயாளிகளைச் சந்தித் தனர். அவர்களுக்கு அளிக்கப் படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தனர்.
பின்னர், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை யில் ஆய்வு செய்தனர். பிறந்து 2 நாட்களே ஆன நிலையில் ஒரு குழந்தைக்கு இங்கு கடந்த மாதம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, வாயில் இருந்த 50 கிராம் கட்டி அகற்றப்பட்டது. அந்த குழந்தையையும் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பார்த்தனர். பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் பொருத்தப்பட்டுள்ள கேமரா, வெளியில் உள்ள உறவினர்கள் குழந்தையை பார்ப்பதற்கு வசதியாக வைக்கப் பட்டுள்ள டிவி போன்றவற்றையும் பார்வையிட்டனர்.
பிறகு, எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு செய்தனர்.