

உள்கட்சி நிர்வாகிகள் தேர்தலுக்காக கட்சித் தலைமை அறிவித்த, தேர்தல் ஆணையர்களுக்கு தொண்டர்கள் ஒத்துழைப்பு தர வேண்டுமென்று, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
அதிமுக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி மாநகர், திருநெல்வேலி புறநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களின் ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிளைக் கழக நிர்வாகிகள், ஊராட்சி கழகச் செயலாளர்கள், நகர வார்டு நிர்வாகிகள், பேரூராட்சிகளுக்கு உட்பட்ட வார்டு நிர்வாகிகள் மற்றும் பகுதிகளுக்கு உட்பட்ட வட்ட நிர்வாகிகள் பொறுப்புகளுக்கு தேர்தல் நடக்கவுள்ளது.
முதல் கட்டத் தேர்தல்களை, வரும் 11-ம் தேதி வியாழக்கிழமை முதல் 15-ம் தேதி திங்கள்கிழமை வரை நடத்த ஒன்றிய, நகர, பேரூராட்சி பகுதிகளுக்கான தேர்தல் ஆணையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
10 மாவட்டங்களில் ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் பகுதி நிர்வாகிகள் ஆகிய பொறுப்பு களுக்கும், வரும் பிப்ரவரி 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை, நடைபெறவுள்ள 6-ம் கட்டத் தேர்தல்களையும் இந்தத் தேர்தல் ஆணையாளர்களே நடத்துவர்.
கட்சித் தேர்தல்கள் சுமுகமாக நடைபெறும் வகையில், மண்டலத் தேர்தல் பொறுப்பாளர்கள், மாவட்டத் தேர்தல் பொறுப்பா ளர்கள் மற்றும் தேர்தல் ஆணை யாளர்களுக்கு தொண்டர் கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.