

தமிழகத்தில் கடலோரப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார்.
அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலையால் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அவர் கூறினார்.
சென்னையில், செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்தார்.