Last Updated : 13 Dec, 2014 09:31 AM

 

Published : 13 Dec 2014 09:31 AM
Last Updated : 13 Dec 2014 09:31 AM

தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை 2 கோடியை நெருங்குகிறது: பஸ், ரயில் வசதிகள் அதிகரிக்காததே காரணம்

தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை 2 கோடியை நெருங்குகிறது. மக்கள்தொகை பெருக்கத்துக்கேற்ப பஸ், ரயில் போன்ற பொதுப் போக்குவரத்து அதிகரிக்காததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் அதிகரித்தபடி உள்ளன. இந்த ஆண்டு நவம்பர் 1-ம் தேதி போக்குவரத்துத்துறை பதிவேடு களின்படி, தமிழகத்தில் ஒரு கோடியே 97 லட்சத்து 72 ஆயிரத்து 131 வாகனங்கள் பதிவு செய் யப்பட்டுள்ளன. இம்மாத இறுதிக் குள் அது இரண்டு கோடியை எட்டும் என்று கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு நவம்பர் 1-ம் தேதியன்று, மாநிலத்தில் ஒரு கோடியே 80 லட்சத்து 64 ஆயிரத்து 787 வாகனங்கள் ஓடிக் கொண்டிருந்தன. இதன்படி ஓராண்டு காலத்துக்குள், 17 லட்சத்து 7 ஆயிரத்து 344 வாகனங் கள் புதிதாக பதிவு செய்யப்பட்டி ருக்கின்றன. ஒரே ஆண்டில் மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரித்துள்ளது.

இருசக்கர வாகனங்கள்

தமிழகத்தில், நவம்பர் 1ம் தேதி நிலவரப்படி, இருசக்கர வாகனங் களின் எண்ணிக்கை ஒரு கோடியே 64 லட்சத்து 23 ஆயிரத்து 530 ஆகும். இது மொத்த வாகனங்களின் எண்ணிக்கையில் 83 சதவீதமாகும். தமிழகத்தில் கடந்த 2013-ம் இதே காலகட்டத்தில் ஒரு கோடியே 49 லட்சத்து 50 ஆயிரத்து 964 இரு சக்கர வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

தமிழகத்தில் நவ.1-ம் தேதி நிலவரப்படி 17 லட்சத்து 55 ஆயிரத்து 245 கார்கள் இயங்கு கின்றன. கடந்த ஆண்டில் அதே காலகட்டத்தில், 15 லட்சத்து 95 ஆயிரத்து 376 கார்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

சென்னையில் பெருகும் வாகனங்கள்

இதுபோல், சென்னையில் கடந்த 2013 நவம்பர் 1-ம் தேதியன்று பதிவாகியிருந்த மொத்த வாகனங் களின் எண்ணிக்கை 40 லட்சத்து 55 ஆயிரத்து 593 ஆகும். அது கடந்த நவம்பர் 1-ம் தேதிப்படி, 43 லட்சத்து 54 ஆயிரத்து 823 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத் தில் இயங்கும் மொத்த வாகனங் களில் சுமார் நான்கில் ஒரு பங்கு (23%) சென்னையில் ஓடிக் கொண் டிருப்பது குறிப்பிடத்தக்கது.

2 கோடியைக் கடந்தது

இது குறித்து போக்குவரத்துத் துறையினர், ‘தி இந்து’ நிருபரிடம் கூறியதாவது:

தமிழகத்தில் நவ.1 தேதிப்படி, 1.97,72,131, வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாநிலத்தில் சராசரியாக ஒரு நாளில் 6,372 புதிய வாகனங்கள் பதிவாகின்றன. மாத சராசரி 1,40,193 ஆகும். இதை வைத்துப் பார்க்கும்போது தற்போது 2 கோடியைக் கடந்தி ருக்கும். இந்தியாவில் 2 கோடி வாகனங்கள் என்ற எண்ணிக் கையை கடந்துள்ள ஒரே மாநிலம் மகாராஷ்டிரம். அங்கு 2013 மார்ச்சில் 2 கோடி எண்ணிக்கை எட்டப்பட்டது. தமிழகத்துக்கு அடுத்தபடியாக உத்தரபிர தேசமும், குஜராத்தும் உள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தனியார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு, பஸ், ரயில் போன்ற பொதுப் போக்குவரத்து அதிகரிக்காததே முக்கிய காரணம் என சென்னை பெரு நகர் வளர்ச்சிக் குழுமத்தைச் சேர்ந்த நகரமைப்பு வல்லுனர்கள் கூறுகின்றனர்.

சென்னையைக் காட்டிலும் சிறிய நகரமான பெங்களூருவில் 6 ஆயிரம் அரசு பஸ்கள் இயங்கு கின்றன. ஆனால், சென்னையில் 3,800 பஸ்கள் மட்டுமே இயங்கு கின்றன. அதுபோல், கும்மிடிப் பூண்டி, அரக்கோணம் மார்க்கத்தில் ரயில்களின் எண்ணிக்கை தேவைக் கேற்ப அதிகரிக்கப்படவில்லை.

மேலும் நகரின் உட்புறப் பகுதிகளுக்கு போக்குவரத்து இணைப்பு வசதி முழுமையாகக் கிடைக்கவில்லை. அதனால் இருசக்கர வாகனங்களையும் கார்களையும் மக்கள் நாடுகின்றனர். மாநிலத்தில் பஸ் வசதியில்லாத பகுதிகளுக்கு அதிக பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, தனியார் வாகனங்களின் எண்ணிக்கையும், வாகனப் பெருக்கம் காரணமாக ஏற்படும் மாசும் குறையும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x