

தமிழகத்தில் முதன் முறையாக நுகர்வோர் குறைதீர் ஆணையம் மூலம் நடந்த மெகா லோக் அதாலத்தில் மாநிலம் முழுவதும் உள்ள நுகர்வோர் நீதிமன்றங்களில் 44 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் மொத்தம் 30 நுகர்வோர் குறைதீர் ஆணை யம் செயல்பட்டு வருகிறது. அவற்றில் 5 மாவட்ட குறைதீர் ஆணை யங்கள் இரண்டு மாவட்டங்களை ஒன்றிணைத்து கூட்டாக செயல் பட்டு வருகிறது. இதுதவிர மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் உள்ளது.
இந்த குறைதீர் ஆணையங்களில் சனிக்கிழமை நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் ‘லோக் அதாலத்' நடைபெற்றது. சென்னை மாநில நுகர்வோர் குறைதீர் ஆணைய வளாகத்தில் லோக் அதாலத் நடைபெற்றது.
மாநிலம் முழுவதும் மொத்தம் 905 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அவற் றில் 44 வழக்குகளுக்கு தீர்வுகாணப் பட்டது. மாநில நுகர்வோர் குறை தீர் ஆணையம் சார்பாக 7 வழக்கு களுக்கு தீர்வு காணப்பட்டது. இந்த வழக்குகளில் பாதிக்கப்பட்டோருக்கு பல லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.