

ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையை அதிகரிப் பது குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் பி.வி.ரமணா தலை மையில் தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. இதில் அமைச்சர் பேசியதாவது:
கொள்முதல் விலை உயர்த்தப் பட்ட பிறகு, ஆவின் நிறுவனத்தின் கொள்முதல் நாளொன்றுக்கு 20.70 லட்சம் லிட்டரில் இருந்து கடந்த 8-ம் தேதி முதல் 26.32 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் இதை 30 லட்சம் லிட்டராக அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.
மாதவரம், அம்பத்தூர் மற்றும் சோழிங்கநல்லூரில் உள்ள ஆவின் பால் இணையங்கள் மூலம் சென் னையில் நாளொன்றுக்கு 11.50 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. இதை அதிகரித்து 13.50 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக 3 பால் பண்ணைகளிலும் உட் கட்டமைப்பு வசதிகளை மேம் படுத்தும் நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.
அம்பத்தூரில் புதிதாக நாளொன்றுக்கு 15 ஆயிரம் லிட்டர் ஐஸ்கிரீம் மற்றும் 1000 கிலோ பனீர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ரூ.21 கோடி செலவில் அமைக் கப்பட்டு வருகிறது. இதன் கட்டு மானப் பணிகள் அடுத்த ஆண்டு ஜூனில் முடிவடையும். அம்பத் தூர் பண்ணையில் புதிய பால் பொருட்களை அறிமுகப்படுத்த வும், அதிக நாட்கள் கெடாமல் இருக்கும் வகையில் டின்களில் அடைக்கப்பட்ட குலோப்ஜாமூன், ரசகுல்லா போன்ற பால் பொருட் களை உற்பத்தி செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
ஆய்வுக் கூட்டத்தில் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை செயலாளர் ச.விஜயகுமார், பால்வளத்துறை ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சுனீல் பாலீவால் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தத் தகவல்கள் தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.