Published : 30 Dec 2014 09:10 AM
Last Updated : 30 Dec 2014 09:28 AM
இலங்கை அதிபர் ராஜபக்சவின் பேட்டி, தந்தி டி.வி.யில் நேற்றிரவு ஒளிபரப்பானது. இதுதொடர்பாக நேற்றைய தினத்தந்தி நாளிதழில் அறிவிப்பு வெளியானது. இதையடுத்து ராஜபக்ச பேட்டியை ஒளிபரப்பக் கூடாது என மதிமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் வேண்டுகோள் விடுத்தன. சென்னை வேப்பேரியில் உள்ள தினத்தந்தி அலுவலகம் முன்பு மதிமுகவினர் போராட்டமும் நடத்தினர். இதற்கு பல்வேறு பத்திரி கையாளர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.
சென்னை பத்திரிகையாளர் மன்றம்:
தந்தி டி.வி.யில் இலங்கை அதிபர் ராஜபக்சவின் பேட்டி ஒளிபரப்பாவதை எதிர்த்து தினத் தந்தி அலுவலகத்தை முற்றுகை யிடுவதாக மதிமுக அறிவித்தது. இந்தப் பேட்டி ஒளிபரப்பானால் தமிழ் மக்களிடையே பெரும் கொந்த ளிப்பை ஏற்படுத்தும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூறியுள்ளது. இதுபோன்ற அறிக்கைகளால், குறிப்பிட்ட ஊடக நிறுவனங்களில் பணிபுரியும் பத்திரி கையாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இது எதிர்காலத்தில் அபாயகரமான போக்குகளை உருவாக்கும். ஊடகங்களின் செயல்பாட்டில் தலையிடுவது ஜனநாயகத்துக்கு நல்ல தல்ல. கருத்துகளை கருத்துக்களால் எதிர்கொள்ள வேண்டும்.
மெட்ராஸ் ரிப்போர்ட்டர்ஸ் கில்டு:
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவ ளவன் ஆகியோரின் அறிக்கை, பேச்சு சுதந்திரத்துக்கும் பத்திரிகை சுதந்திரத்துக்கும் எதிரானது. இலங்கை அதிபரின் பேட்டி வெளியான பிறகு இந்த தலை வர்கள் தங்கள் கருத்துகளை தாராளமாக தெரிவிக்கலாம். மாறாக இந்தத் தலைவர்களின் செயல் பத்திரிகை சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்க முயல்வ தாக உள்ளது.
சென்னை பத்திரிகையாளர் சங்கம்:
தந்தி குழுமத் தில் பணியாற்றும் ஊடகவியலாளர் களுக்கு எதிராக தொண்டர் களைத் தூண்டிவிடும் வகை யில் தெரிவிக்கப்படும் இது போன்ற அறிக்கைகள் கண்டனத் துக்குரியது. கருத்தியல் ரீதியாக முரண்பாடுகள் இருந்தால் அரசி யல் கட்சிகள், அமைப்புகள் ஜன நாயக ரீதியாக போராட்டம் நடத்தலாம்.
இதற்கிடையே, “ஊடக சுதந்தி ரத்தை மதிக்கிறோம், நாங்கள் வேண்டுகோள்தான் விடுத் தோம். அச்சுறுத்தல் எதுவும் விடுக்க வில்லை’ என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.