

இந்திய அஞ்சல் துறை, இ-போஸ்ட் என்னும் சேவையை வழங்கி வருகிறது. இதன் மூலம் இந்தியாவின் முக்கிய அஞ்சலகங்களிலிருந்து எங்கு வேண்டுமானாலும் கடிதங்கள் வாழ்த்துகள் போன்றவற்றை இணையம் மூலம் அனுப்பலாம்.
இணையத்தில் மென் நகல்களாக (Soft Copies) அனுப்பப்படும் அந்த கடிதங்களும், வாழ்த்துகளும் காகிதங்களில் நகல்களாக அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நடிகர் ரஜினி காந்தின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் இ-போஸ்ட் மூலம் வாழ்த்தலாம் என்று இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை நகர மண்டல அஞ்சல்துறை தலைவர் மெர்வின் அலக்சாண்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த ஆண்டு ரஜினிகாந்தின் பிறந்த நாளுக்கு ரசிகர்கள் இ-போஸ்ட் மூலம் வாழ்த்து தெரிவிக்கலாம்.
முக்கியமான தபால் நிலை யங்களிலிருந்து ரஜினிக்கான வாழ்த்தை இணையத்தின் மூலம் சென்னை அபிராமபுரம் (600018) தபால் நிலையத்துக்கு அனுப்பலாம். இப்படி அனுப்பப் படுகிற மென் நகல் (Soft Copy) வாழ்த்துகள், வன் நகல்களாக (hard copy) ரஜினியிடம் கொண்டு சேர்க்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது