Published : 01 Apr 2014 10:35 AM
Last Updated : 01 Apr 2014 10:35 AM

ரூ.5 கோடி நாணயங்கள் பறிமுதல்

சோழவரம் அருகே உரிய பாதுகாப் பின்றி ரூ.5 கோடி மதிப்பிலான 5 ரூபாய் நாணயங்கள் அடங்கிய 7 கன்டெய்னர் லாரிகளைத் தேர்தல் பறக்கும் படையினர் திங்கட்கிழமை பறிமுதல் செய்தனர்.

சோழவரம் அருகே உள்ள சுங்கச் சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் திங்கள்கிழமை அதிகாலை வாகனச் சோ தனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த 7 கண்டெய்னர் லாரிகளை மடக்கி சோதனையிட்டனர். அதில் 2,500 மூட்டைகளில் 5 ரூபாய் நாணயங்கள் இருப்பது தெரிய வந்தது. அவற்றின் மதிப்பு ரூ.5 கோடியாகும்.

இந்த நாணயங்கள் மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவிலிருந்து சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்குக் கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது. மேலும், உரிய ஆவணங்களும் இருந்தன. எனினும் உரிய பாதுகாப்பின்றி கொண்டு செல்லப்பட்டதால் அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும், இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியான ஆட்சியருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து ரிசவ் வங்கி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு நேரில் வந்தனர். அவர்களிடம் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் விசாரணை நடத்திய பின்னர், அந்த நாணயங்கள் ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப் பட்டன. பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கண்டெய்னர் லாரிகள் எடுத்துச் செல்லப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x