Published : 22 Dec 2014 04:35 PM
Last Updated : 22 Dec 2014 04:35 PM

ஒரு லட்சம் ஏழைக் குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்குகிறது சீஷா அமைப்பு

ஒரு லட்சம் ஏழைக் குழந்தைகளுக்கு புத்தாடைகளும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கும் திட்டத்தை சீஷா தொண்டு நிறுவனம் தொடங்கியது.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, ஆண்டுதோறும் ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாக புத்தாடைகள் வழங்கி வருகிறது. அதன்படி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை சென்னையில் தொடங்கியது.

சீஷா தொண்டு நிறுவனத்தின் நிறுவனரும், காருண்யா பல்கலைக்கழகத்தின் வேந்தரும்மான டாக்டர். பால் தினகரன் தலைமை தாங்கிய இந்த நிகழ்ச்சியில் 1,000 குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது.

அதேபோல், மாற்றுத் திறனாளிகளுக்கு 5 மாற்றி வடிவமைக்கப்பட்ட ஸ்கூட்டி பெப் வாகனமும், 2 சக்கர நாற்காலி, சீஷா பெண்கள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ஏழைப் பெண்களுக்கு 11 இலவச தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x