

மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் குறுகிய கால பயிற்சி பெற்ற பகுதிநேர தொழிற்கல்வி ஆசிரியர்களை முறையான ஊதிய விகிதத்தில் கொண்டுவருவதற்காக உபரியாக இருந்த 702 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் சரண் செய்யப்பட்டன.
அதற்குப் பதில் அதே ஊதிய விகிதம் கொண்ட 680 தொழிற்கல்வி ஆசிரியர் (கிரேடு-1) பணியிடங்கள் புதிதாக ஏற்படுத் தப்பட்டு அவற்றுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டு வருகிறது.
30.9.2014 வரை தற்காலிக நீட்டிப்பு வழங்கப்பட்ட அந்த பணியிடங்களுக்கு 1.10.2014 முதல் 30.9.2015 வரை அல்லது தொடர் நீட்டிப்பு குறித்த நிதித்துறையின் மறுஆய்வில் முடிவெடுக்கும் வரை இவற்றில் எது முந்தையதோ அதுவரை தொடர் நீட்டிப்பு வழங்கி பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.