

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில் நேற்று ‘கால்நடை இனப்பெருக்கத்தின் பயன்பாடு சார்ந்த ஆராய்ச்சி மற்றும் தற்போதைய சவால்கள்' என்ற தலைப்பில் 2 நாள் சர்வதேச கருத்தரங்கம் தொடங்கியது.
இந்த கருத்தரங்கை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டி.ஜே.ஹரிகிருஷ்ணன் தொடங்கி வைத்து பேசியதாவது:
கால்நடைகளுக்கு நவீன தொழில் நுட்பங்களின் மூலம் இனப்பெருக்கம் செய்வது தொடர்பாக விளக்குவதற்காக இக்கருத்தரங்கத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வளர்ந்த நாடுகளில் ஆண் கால்நடைகளில் விந்துகள் சேகரிக்கப்படுகின்றன. அவற்றை கொண்டு ‘x' மற்றும் ‘y' குரோமோசோம்கள் பிரிக்கப்படுகின்றன. இதன் மூலம் ஆண் அல்லது பெண் கன்றுகளை பிறக்க வைக்க முடியும். இந்த புதிய தொழில்நுட்பம் நம்முடைய நாட்டுக்கு தேவையான ஒன்று. நம் நாட்டில் உள்ள கால்நடைகளில் 10% மலட்டுத்தன்மை கொண்டவையாக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.