Published : 04 Dec 2014 12:33 PM
Last Updated : 04 Dec 2014 12:33 PM

நாளை திருவண்ணாமலை தீபத் திருவிழா: மகாதீபக் கொப்பரை தயார்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நாளை நடைபெறுகிறது. 2,688 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தைக் காண 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலை நகரில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தீபக் கொப்பரை அண்ணாமலைக்கு எடுத்துச் செல்லும் நிகழ்வு நேற்று நடந்தது. அண்ணாமலையார் கோயிலில் தீபக் கொப்பரைக்கு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங் கள் முழங்க சிறப்பு பூஜை செய்யப்பட்டது. கோ பூஜைக் குப் பிறகு கோயில் யானை ஆசீர்வாதத்துடன் தீபக் கொப் பரை 2,688 அடி உயரம் உள்ள அண்ணாமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. தீபக் கொப்பரையை சுமந்து செல்லும் சாவல்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த பரம்பரையினர் கொப்பரையைத் தூக்கிச் சென்றனர்.

நாளை பரணி தீபம், மகா தீபம்:

தீபத் திருவிழாவின் 9-ம் நாளான இன்று காலை புருஷா முனி வாகனத்தில் விநாயகர், சந்திரசேகரர் வீதியுலா நடைபெறும். நாளை அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படும். மாலையில் தங்க விமானத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருள, அர்த்தநாரீஸ்வரர் காட்சி தர மாலை 6 மணியளவில் அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படவுள்ளது.

திருவண்ணாமலை மகா தீபத்துக்கான தீபக் கொப்பரையை அண்ணாமலைக்கு எடுத்துச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x