Published : 09 Dec 2014 09:12 AM
Last Updated : 09 Dec 2014 09:12 AM

அடிக்கல் நாட்டு விழா நடந்ததையே பணி நிறைவுற்றதாக சொல்கிறார்கள்: அரசு மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழகத்தில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களில், அடிக்கல் நாட்டு விழா நடத்தப் பட்டவற்றையே பணி நிறைவடைந் ததாக கூறுகிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவைக்கு வெளியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழக சட்டப்பேரவையில் 2014-15 ஆண்டுக்கான துணை மதிப்பீடு மீதான விவாதத்தில் திமுக சார்பில் எனது கருத்துக் களை சொல்வதற்காக, பல குறிப்புக்களையும் புள்ளி விவரங் களையும் எடுத்துக்கொண்டு வந்திருந்தேன். புள்ளிவிவரங் களோடு எதையாவது பேசி, ஆட்சிக்கு ஏதாவது சிக்கலை ஏற்படுத்தி விடுவேனோ என்று அஞ்சி வேண்டுமென்றே, என்னை பேசவிடாமல் தடுத்து விட்டனர்.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆகஸ்ட் மாதமும், கடந்த 4-ம் தேதி இரண்டு முறை துணை மதிப்பீடு வைக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான துணை மதிப்பீடு புத்தகத்தில், ரூ 11,336.92 கோடி நிதி ஒதுக்குவதாக குறிப்பிடப்பட் டுள்ளது. இந்நிலையில், கடந்த 4-ம் தேதி வெளியிடப்பட்ட புத்தகத்தில் ரூ. 1751.18 கோடி நிதியை ஒதுக்க பரிந்துரை செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் மொத்த தொகை ரூ.13,000 கோடியாகவுள்ளது.

ஆனால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, இதற்கு முன்பு 110-விதியின் கீழ், 36 அறிக்கைகளை படித்துள்ளார். இந்த அறிவிப்பு களின் மொத்த மதிப்பு ரூ.31,208 கோடியாகும். ஆனால், அரசாங்கத்தால் அச்சடித்து தரப்பட்ட புத்தகத்தில் பார்த்தால் வெறும் ரூ 13,000 கோடி அளவுதான் திட்ட மதிப்பீடுகள் உள்ளன. இது, ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், வெறும் அறிவிப்பு களாக உள்ளதையே காட்டுகிறது. அடிக்கல் நாட்டுவிழா நடந் ததையே பணிகள் முடிந்ததாக சொல்லியுள்ளார்கள். இதற்கான புள்ளி விவரங்களையும் நான் வைத்துள்ளேன்.

இதுமட்டுமன்றி உரத் தட்டுப் பாடு, மின்சாரக் கட்டணம் உயரக்கூடிய கொடுமை, பால் விலை உயர்வு, இவற்றோடு, தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பிரச்சினைகளையும் பேசவிருந் தேன். ஆனால் திட்டமிட்டே என்னை பேசவிடாமல் செய்தனர்.

மேலும், முதலமைச்சருடன் நாங்கள் வாதம் செய்தபோது பக்கத்தில் அமர்ந்திருந்த அமைச்சர் வைத்திலிங்கம், என்னை பார்த்து தரம் தாழ்ந்து பேசினார். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x