Last Updated : 29 Dec, 2014 10:21 AM

 

Published : 29 Dec 2014 10:21 AM
Last Updated : 29 Dec 2014 10:21 AM

பாஜகவுக்கு எதிரான கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்: ஐக்கிய ஜனதா தளம் அழைப்பு

பாஜகவுக்கு எதிரான கொள்கை யுடைய கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரளவேண்டும் என ஐக்கிய ஜனதா தளம் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

முந்தைய ஜனதா கட்சியி லிருந்து பிரிந்த கட்சிகளை மீண்டும் ஒன்றுபடுத்த ஐக்கிய ஜனதா தளம் முயற்சி எடுத்துவருகிறது.

இந்நிலையில் கேரளம் வந் துள்ள பிஹார் முன்னாள் முதல்வர் நிதிஷ்குமார் நேற்று செய்தியாளர் களிடம் கூறும்போது, பாஜக வின் பிரிவினைவாத கொள்கை நாட்டுக்கு ஆபத்தானது. எனவே அந்தக் கட்சியை தனிமைப்படுத் துவது அவசியமாகும். அதற்கு நாம் ஒன்றுபடவேண்டும்.

சமூகத்தை பிளவுபடுத்துவது தான் பாஜகவின் அடிப்படைக் கொள்கை. எனவே பிறகட்சிகள் அனைத்தும் ஒன்றுபடவேண்டும். பாஜகவின் மதவாதக் கொள்கை களை எதிர்க்க பொதுவான கொள்கை, கோட்பாடு உடைய மக்கள் ஒன்றுபட்டாகவேண்டும். அந்த நோக்கத்தில்தான் சோஷலிச கட்சிகள் இணைகின்றன” என்றார்.

ஐக்கிய ஜனதா தளம் கட்சி யுடன் கேரளத்தில் விரேந்திர குமார் தலைமையிலான சோஷலிச ஜனதா (ஜனநாயகம்) கட்சி இணையும் நிகழ்ச்சிக்காக நிதிஷ்குமாரும் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவும் இம்மாநிலத்துக்கு வந்திருந்தனர்.

இந்நிலையில் சரத் யாதவ் கூறும்போது, “சோஷலிச இயக்க மும் ஜனதா கட்சியும் சிதறுண்ட தால் நாட்டுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. பாஜக வளர் வதற்கு இதுவே காரணம். பிரிந்து போன ஜனதா பரிவார் கட்சிகளை இணைப்பதில் கவனம் செலுத்து கிறோம். இந்த இணைப்புக்குப் பின்னர், சோஷலிச இயக்கம் வளர வும் பாஜக கொள்கை பரவு வதை தடுக்கவும் அனைத்து வாய்ப்புகளையும் ஆராய்வோம்.

இடதுசாரிகளுடன் எங்களது உறவு சுமுகமாக உள்ளது. எங் களது இயற்கையான நண்பர்கள் அவர்கள். நாட்டில் விரும்பத்தகுந்த வளர்ச்சியை எட்டுவதில் சோஷலிச தலைவர்களின் பங்கு போதிய அளவில் இல்லை. நாட்டின் கணிசமான மக்கள் ஏழைகளும் தொழிலாளர்களுமே. இதை பாஜக சரியாக பயன்படுத்திக்கொண்டது.

ஜனதா பரிவார் கட்சிகள் பிரிந்த தால் பெரும்பாலான மக்கள் பாஜக வில் இணைந்தனர். அவ்வாறு இணைந்தவர்கள் தாங்கள் செய் தது தவறு என்பதை புரிந்து கொண்டு சோஷலிச கட்சிகள் பக்கம் திரும்புகின்றனர். சோஷலிச இயக்கம் வளர உகந்த சூழ்நிலை உருவாகி உள்ளது. எனவே தனித்து செயல்படும் 7 சோஷலிச குழுக் களும் இணைவது அவசியம்” என்றார்.

ஐக்கிய ஜனதா தளத்துடன் சோஷலிஸ்ட் ஜனதா (ஜனநாயகம்) கட்சி இணைவதால் கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட் டணி அரசுக்கு பாதிப்பு ஏற்படாது என்றார் நிதிஷ்குமார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x