

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் அடுத்த கிளாக் குளத்தைச் சேர்ந்த 13 வயது மாணவி. 2012-ம் ஆண்டு பள்ளிக்கு செல்ல தாதன்குளம் ரயில் நிலையத்துக்கு நடந்து சென்றபோது, பாலியல் பலாத்கார முயற்சியில் கொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக பாறை குட்டத்தைச் சேர்ந்த சுப்பையா (37) என்பவரை செய்துங்கநல்லூர் போலீஸார் கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை தூத்துக் குடி மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இவ்வழக்கு நேற்று விசார ணைக்கு வந்தது. சுப்பையாவுக்கு, கொலை குற்றத்துக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம், குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டம் மற்றும் விதிகள் - 2012-ன் 8-வது பிரிவின் கீழ் 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித் தார். தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி பால்துரை உத்தரவிட்டார்.
தீர்ப்பு குறித்து மாணவியின் தாத்தா கூறும்போது, “இந்த தண்டனை போதாது. இதுபோன்ற குற்றங்களைச் செய்ய மற்றவர்கள் அஞ்சும் வகையில் எதிரிக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க போலீஸார் மேல்முறையீடு செய்ய வேண்டும்” என்றார் அவர்.
சரியான தீர்ப்பு
அரசு வழக்கறிஞர் எஸ்.சந்திர சேகர் கூறும்போது, “இந்த வழக்கில் விசாரணை கடந்த செப் டம்பர் 17-ம் தேதி தொடங்கி 4 மாதங்களுக்குள் தீர்ப்பு கிடைத் துள்ளது. சமுதாயத்துக்கு எதிரான குற்றம் என்பதால் வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத் தோம். இது சரியான தீர்ப்புதான்” என்றார் அவர்.