Published : 04 Dec 2014 11:28 AM
Last Updated : 04 Dec 2014 11:28 AM

அம்பேத்கரின் புகைப்படங்கள் கண்காட்சி: சாஸ்திரி பவனில் நடைபெறுகிறது

மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் சார்பில், டாக்டர் அம்பேத்கரின் புகைப்படக் கண் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. 6-ம் தேதி வரை நடை பெறும் இக்கண்காட்சியில், அம்பேத்கரின் 200-க்கும் மேற்பட்ட அரிய புகைப் படங்கள் இடம் பெற்றுள்ளன.

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம் வரும் 6-ம் தேதி அனுசரிக் கப்படுகிறது. இதனை முன்னிட்டு மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் விளம்பரம் மற்றும் காட்சி இயக்குநரகத்தின் கண்காட்சி அலுவலகம் மற்றும் சாஸ்திரிபவன் எஸ்சி எஸ்டி பெண் ஊழியர்கள் நலச் சங்கம் இணைந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவன் வளாகத் தில் டாக்டர் அம்பேத்கரின் புகைப் படக் கண்காட்சி நேற்று தொடங்கப் பட்டது.

இதை பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக் குநர் கே.எம்.ரவீந்திரன் திறந்து வைத்தார். ஓய்வு பெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவகாமி சிறப்பு விருந்தினராக பங்கேற் றார். அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட குறிப்பேட்டை, தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையத்தின் உதவி இயக்குநர் ராமசாமி வெளியிட்டார்.

அம்பேத்கரின் புகழைப் பரப்பும் வகையில், பள்ளி மாணவர்க ளுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டி கள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப் படுகின்றன.

இக்கண்காட்சி வரும் 6-ம் தேதி வரை நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சியை பொதுமக்கள் இலவசமாக கண்டு பயன்பெறலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x